ஆப்பிள் கருவிகளைத் திருடி விற்ற பொறியாளருக்குச் சிறை

1 mins read
12d85dcd-4624-4ed1-968b-063d027c8e15
கோப்புப் படம்: - பிக்சாபே

தான் வேலை செய்த பள்ளியில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்த 49 கருவிகளைத் தொழில்நுட்ப உதவிப் பொறியாளர் (IT help desk engineer) ஒருவர் திருடியிருக்கிறார்.

திருடிய கருவிகளை விற்று அவர் 13,200 வெள்ளி லாபம் அடைந்ததாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்துள்ளது.

குற்றவாளியான 29 வயது லிம் போ ஹெங் ஆண்ட்ரூக்கு திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 10) ஒன்பது மாதச் சிறைத் தண்டனையும் 1,200 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன. நம்பிக்கை துரோகம் இழைத்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டை (amalgamated charge) அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து லிம், ஸ்டேம்ஃபர்ட் அனைத்துலக அமெரிக்கப் பள்ளியின் தொழில்நுட்ப உதவிப் பிரிவில் வேலை செய்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்பள்ளியில் பயிலும் சுமார் 3,250 மாணவர்கள், வேலை செய்யும் 660 ஊழியர்களுக்குத் தொழில்நுட்ப விவகாரங்களில் உதவுவது அவரின் பொறுப்பாக இருந்தது. அதோடு, பள்ளியின் மின்சாரக் கருவிகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலும் அவர் இருந்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான நான்கு மாத காலத்தில் லிம், 13 மேக்புக் ஏர் (MacBook Air) மடிக்கணினிகளையும் 33 ஐபேடுகளையும் களவாடினார். அவற்றின் மொத்த மதிப்பு 31,772 வெள்ளி.

குறிப்புச் சொற்கள்