ஏமாற்றி $543,000 பறித்த முன்னாள் காப்புறுதி முகவருக்குச் சிறை

1 mins read
cd48cc81-8e07-451e-9227-cf1551885f1a
கோப்புப் படம்: - தமிழ் முரசு

ஆடவர் ஒருவரை ஏமாற்றி 543,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறித்த முன்னாள் காப்புறுதி முகவருக்கு திங்கட்கிழமையன்று (டிசம்பர் 9) ஈராண்டுகள், எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2018ஆம் அண்டு மார்ச் மாதத்துக்கும் 2019 மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் குற்றவாளி மொத்தம் 35 முறை தனக்குப் பணம் அனுப்புமாறு ஆடவரிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி, அனுப்பப்பட்ட மொத்த தொகை 543,000 வெள்ளிக்கும் மேல்.

குற்றவாளியான 44 வயது ஆண்ட்ரூ டியூ சியூ இங், அந்த ஆடவரை ‘முதலீட்டுத் திட்டம்’ ஒன்றில் முதலீடு செய்ய வைத்தார். ஆனால், உண்மையில் அத்தகைய திட்டம் ஏதும் நடப்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

டியூ, ஏமாற்றியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார். இதனுடன் சம்பந்தமில்லாத, பிறரைத் தாக்கியாகச் சுமத்தப்பட்டிருந்த ஒரு குற்றச்சாட்டையும் அவர் அன்றைய தினம் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு எதிரான தீர்ப்பின்போது ஏமாற்றியது தொடர்பில் மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.

டியூ பணியாற்றிய காப்புறுதி நிறுவனத்துடனான அவரது வேலை ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு மே மாதம் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பிறகு அவர், ஏமாற்றப்பட்ட 44 வயது ஆடவருக்கு 16,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்