பிள்ளைகளைத் துன்புறுத்திய முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியருக்குச் சிறை

1 mins read
e9a04470-9f86-4e9f-af39-e65c1a1a4d30
குற்றத்தை ஒப்புக்கொண்ட பாலர் பள்ளி ஆசிரியருக்கு ஓராண்டு, ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: சாவ்பாவ்

இரண்டு பிள்ளைகளைத் துன்புறுத்திய முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியருக்கு திங்கட்கிழமை (மே 5) ஓராண்டு, ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளை அறைந்தது, வெளிச்சமில்லாத அறையில் அவர்களை இழுத்துச் சென்றது ஆகிய 30 வயது சிங்கப்பூர்ப் பெண்ணின் துன்புறுத்தும் செயல்கள் கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.

ஒரு வயது சிறுமி, இரண்டு வயது சிறுவன் ஆகியோரின் அடையாளங்களைப் பாதுகாக்க குற்றஞ்சாட்டப்பட்ட பாலர் பள்ளி ஆசிரியரின் பெயரை நீதிமன்றத்தில் வெளியிடவில்லை.

பெண்ணின் செயலால் இரண்டு பிள்ளைகளும் மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் துணை அரசாங்க வழக்கறிஞர் ஏரியல் டான் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமி தூக்கத்தில் அழுவதும் ‘வேண்டாம்’ அல்லது ‘இல்லை’ என்று சொல்வதுமாக இருந்ததை வழக்கறிஞர் சுட்டினார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் கண்டிக்கப்படும்போதெல்லாம் மேசைக்கு கீழ் ஒளிந்துகொள்வதோடு இருட்டறைக்குள் ஒரு மூலையில் அமரும் பழக்கத்தையும் கொண்டிருந்தான்.

பிள்ளைகளைத் துன்புறுத்திய ஆசிரியருக்கு ஐந்து மாதத்திலும் 17 மாதங்களிலிலும் இரண்டு பிள்ளைகள் உண்டு. அந்தப் பெண் தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அவரது முன்னாள் சக ஊழியர் 29 வயது சீனப் பெண்ணுக்கு ஏப்ரலில் 14 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இரண்டு பெண்களும் ஒன்றரை வயதிலிருந்து மூன்று வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளைப் பராமரித்தனர்.

அப்போதுதான் அந்தப் பெண்கள் பிள்ளைகளைத் துன்புறுத்தியது கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்