ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள மதுக்கூடம் ஒன்றில் பாதுகாப்பாளராக (பவுன்சர்) வேலை செய்த வந்த சுர்பஃகர் முஸ்லி கத்தி வைத்திருந்த குற்றத்திற்காக ஆறு மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படியும் விதிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அதிகாலை ‘கிளப் ரூமர்ஸ்’ மதுக்கூடம் அருகே சட்டவிரோதக் கும்பலில் உள்ளவர்களைக் கண்ட சுர்பஃகர் தமது ஊழியர்களைப் பெட்டியில் இருந்த மூன்று கத்திகளை எடுத்து வரச்சொன்னார்.
சுர்பஃகருக்கு உதவியாக அவருடைய சகாக்கள் முகம்மது டெனியல் அசார், முகம்மது ஷாருல்நிசாம் மற்ற இரு கத்திகளை எடுத்துக்கொண்டனர்.
சட்டவிரோதக் கும்பலில் உள்ளவர்களுக்கும் சுர்பஃகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது முகம்மது இஸ்ராட் இஸ்மையில் என்னும் 29 வயது ஆடவர் அஸ்வின் பச்சன் பிள்ளை சுகுமாரன் என்னும் ஆடவரால் கத்தியால் குத்தப்பட்டு மாண்டார்.
சுர்பஃகர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார். மோதல் ஏற்பட்டபோது சுர்பஃக கத்தியைப் பயன்படுத்தவில்லை.
அஸ்வின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாகப் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அஸ்வினின் கூட்டாளிகளான ஸ்ரீதரன் இளங்கோவன், மனோஜ் குமார் வேலையானந்தம் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சுர்பஃகருக்கு உதவிய முகம்மது டெனியல் அசார், முகம்மது ஷாருல்நிசாமுக்கும் இதற்கு முன்னர் தண்டனை விதிக்கப்பட்டது.