குழந்தையைத் தாக்கி பெற்றோரிடம் பொய் சொன்ன பணிப்பெண்ணுக்குச் சிறை

குழந்தையைத் தாக்கி பெற்றோரிடம் பொய் சொன்ன பணிப்பெண்ணுக்குச் சிறை

1 mins read
8fdfcc87-b033-4498-b227-e6a1aab17148
கோப்புப் படம்: - தூமிழ் முரசு

உடல்நலம் குன்றியிருந்த ஒரு வயது குழந்தையின் முகத்தில் அடித்து நெஞ்சில் கையால் குத்திய பணிப்பெண்ணுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரைச் சேர்ந்த சு யீ மொன் என்ற அந்தப் பணிப்பெண், குழந்தையின் வயிற்றைப் பலவந்தமாக அழுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு குழந்தைக்கு ஏற்பட்ட தடிப்புக் காயங்களை மறைக்க அவற்றின் மேல் சக்கரை தடவி பெற்றோரிடம் பொய் சொன்னார். குழந்தை விழுந்ததால் காயங்கள் ஏற்பட்டதாக சு யீ மொன், பெற்றோரிடம் கூறினார்.

வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி மூலம் குழந்தையின் தந்தை நடந்ததை அறிந்தார்.

குழந்தையைக் கொடுமைப்படுத்தியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 29 வயது சு யீ மொன் ஒப்புக்கொண்டார். திங்கட்கிழமையன்று (ஜனவரி 21) அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் வெளியே தெரியாமல் இருக்க சம்பந்தப்பட்ட தகவல்கள், அக்குடும்பம் வசிக்கும் முகவரி போன்ற விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களிலிருந்து அகற்றப்பட்டன.

குறிப்புச் சொற்கள்