பணிப்பெண்ணைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை

1 mins read
b2020a9c-d6f5-4d8d-99ec-4c2a0f032aba
கோப்புப்படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தன்னைப் பாலியல் ரீதியாக இன்பப்படுத்துமாறு பணிப்பெண்ணிடம் கேட்டுக்கொண்டு பின்னர் இடைவாரால் அவரைத் தாக்கிய ஆடவருக்கு மூன்று மாதம் 10 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான 62 வயது ஆடவருக்கு புதன்கிழமை (ஜூன் 11) தண்டனை விதிக்கப்பட்டது. வேண்டுமென்றே காயம் விளைவித்தது, மனைவியிடம் பலவந்தமாக நடந்துகொண்டது ஆகிய குற்றங்களை அவர் புரிந்தது நிரூபிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு இழப்பீடாக 1,000 வெள்ளி வழங்குமாறும் குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளி, அவரின் மனைவி, அவர்களின் பணிப்பெண் ஆகியோரின் பெயர்கள் நீதிமன்ற ஆவணங்களிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டன.

குற்றவாளியின் மனைவி, 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் பணிப்பெண்ணை வேலைக்கு எடுத்திருந்தார். அந்த ஆண்டு குற்றவாளி, பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பணிப்பெண்ணிடம் தான் தவறாக நடந்துகொண்டது மனைவியிடம் தெரிவிக்கப்பட்டதை அறிந்த குற்றவாளி பணிப்பெண்ணைத் தாக்க முயன்றிருக்கிறார். பணிப்பெண்ணைத் தாக்கியபோது குற்றவாளி, மனைவியையும் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனைவிக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை.

பணிப்பெண்ணின் தலையிலிருந்து ரத்தம் சொட்டுவதை மனைவி தெரிவித்த பிறகுதான் குற்றவாளி தாக்குவதை நிறுத்திக்கொண்டார். பணிப்பெண் தாக்கப்படும்போது குற்றவாளியின் மனைவி அவரைக் அணைத்துப் பாதுகாக்க முயன்றிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்