தமது மனைவியையும் அவரது கள்ளக் காதலனையும் தகுந்த ஆதாரத்துடன் பிடிக்க முயற்சி செய்த 29 வயது நூயென் வான் தோ வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார்.
நூயென் வீட்டில் இல்லாதபோது அவரது மனைவி கள்ளக்காதலனை அழைத்தார்.
கண்காணிப்பு கேமராவில் கள்ளக்காதலனைக் கண்ட நூயென், தியோங் பாருவில் உள்ள தமது வீட்டிற்கு விரைந்தார்.
கோபத்தில் இருந்த நூயென் வீட்டில் இருந்த 18 செண்டி மீட்டர் நீளமுள்ள சமையல் கத்தியால் கள்ளக் காதலனை சரமாரியாகத் தாக்கினார்.
அந்தத் தாக்குதலில் கள்ளக்காதலனுக்கு ஆறு முதல் ஏழு இடங்களில் வெட்டுக்கள் ஏற்பட்டன.
ஒருவரை வேண்டுமென்றே ஆயுதத்தைக் கொண்டு தாக்கிய குற்றத்திற்காக நூயெனுக்கு 60 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நூயென் படுக்கை அறையில் ரகசியமாக கண்காணிப்பு கேமராவைப் பொருத்தி தமது 30 வயது மனைவியை கைப்பேசி வாயிலாக கண்காணித்ததாக நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி காலை 7 மணிக்கு நூயென் இல்லாத நேரம் பார்த்து தமது 28 வயது கள்ளக்காதலனை பியோ கிரசெண்டில் உள்ள வீட்டிற்கு அவரது மனைவி அழைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அலுவலகத்தில் இருந்தவாரே வீட்டை நோட்டமிட்ட நூயென் வீட்டிற்குச் சென்று ஆடவரைத் தாக்கினார்.
நூயெனால் தாக்கப்பட்ட ஆடவர் மாடிப்படிகள் வழியாக தப்பி ஓடினார். ஆடவர் ரத்த வெள்ளத்தில் இருந்ததைக் கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் நூயென் கைது செய்யப்பட்டார்.
நூயெனால் தாக்கப்பட்ட ஆடவர் காயங்களில் இருந்து முழுமையாக குணமடைய கிட்டத்தட்ட ஓர் ஆண்டு ஆகும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.