216,000 வெள்ளி லஞ்சம் கொடுத்தவருக்குச் சிறை

216,000 வெள்ளி லஞ்சம் கொடுத்தவருக்குச் சிறை

1 mins read
1b238fbe-ea09-49f6-b2ed-9cd2bb5a1b58
கென்னத் லஞ்சம் வழங்கியதன் மூலம் 633,000 வெள்ளி லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எஸ்எம்யூ அகாடமியின் முன்னாள் வர்த்தக இயக்குநருக்கு 15 மாதங்களில் 216,000 வெள்ளிக்கு மேலான லஞ்சம் வழங்கிய ஆடவருக்கு 2 ஆண்டுகள் 4 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கென்னத் லம் சியன் லூங் என்ற அந்த 47 வயது நபர் குற்றம் செய்த போது ஐஏஎம் எனும் நிறுவனத்தில் இயக்குநராக வேலை செய்தார்.

கென்னத் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குற்றச்செயலில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிய 46 வயது கிரிஸ்தபர் டான் தோ கீ இப்போது எஸ்எம்யூ அகாடமியில் இல்லை.

எஸ்எம்யூ அகாடமி ஐஏஎம் நிறுவனத்தின் சேவைகளை தொடர கென்னத், டானுக்கு லஞ்சம் கொடுத்தார்.

கென்னத் லஞ்சம் வழங்கியதன் மூலம் 633,000 வெள்ளி லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுத்த வழக்கில் கென்னத்தை போல் மேலும் சிலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் டான் பல்வேறு நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளது விசாரணையில் நிரூபணமானது. டான் $472,000 வெள்ளிக்கு அதிகமாக லஞ்சம் வாங்கியுள்ளார்.

அவருக்கு 3 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்