தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கத்திக்குத்து சம்பவம்: 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவருக்குச் சிறை

1 mins read
d0e7c6ca-0bff-4d3f-a935-ea50ac440bf1
படம்: - பிக்சாபே

வெவ்வேறு சம்பவங்களில் இருவரைக் கத்தியால் குத்தி பலத்த காயங்கள் ஏற்படுத்திவிட்டு பிலீப்பீன்சுக்குத் தப்பியோடிய 66 வயது நான் கியம் செங்கிற்கு 3 ஆண்டுகள், 6 மாதச் சிறைத் தண்டனை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) விதிக்கப்பட்டது.

1998ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் இருக்கும் இரவு கேளிக்கை கூடத்தில் ஒருவரையும் 1999ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி மற்றொரு நபரையும் நான் கத்தியால் குத்தினார்.

1999ஆம் ஆண்டு பிலிப்பீன்சுக்குத் தப்பிச் சென்ற அவர், அங்கு உரிமம் இல்லாமல் தங்கியதற்காக 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார்.

2014ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

தன்மீது சுமத்தப்பட்ட ஆபத்தான ஆயுதம் கொண்டு ஒருவருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை நான் நீதிமன்றத்தில் ஒப்பக்கொண்டார்.

தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறிப்புச் சொற்கள்