கேபோட் போதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தவருக்குச் சிறை

கேபோட் போதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தவருக்குச் சிறை

காணொளிப் படங்கள்: ஸ்டாம்ப் வாசகரின் காணொளி

11 Nov 2026 - 5:42 pm

2 mins read

ஆடவர் ஒருவர் ஐந்து மாதங்களில் நான்கு சாலை விபத்துகளில் சிக்கினார்.

அவற்றில் இரு சம்பவங்களில் அவர் கேபோட் மின்சிகரெட்டின் கட்டுப்பாட்டில் வாகனம் ஓட்டினார். அச்சம்பவங்களில் ஒன்றில் 83 வயது மூதாட்டி கொல்லப்பட்டார். அவரின் 84 வயது நண்பர் காயமுற்றார்.

சிறைத்தண்டனை

குற்றவாளியான லிம் ஜின்‌ஷெங்குக்கு புதன்கிழமை (நவம்பர் 11) ஆறு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், 15 வாரங்கள் சிறைத்தன்டணை விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவர் 14 வாகனம் ஓட்ட 14 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கவனமின்றி வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தது, போதைப்பொருளின் கட்டுப்பாட்டில் வாகனம் ஓட்டியது, எட்டோமிடேட் வைத்திருந்தது உட்பட தன்மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு நிகழ்ந்த சம்பவம்

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி புக்கிட் தீமா விரைவிச்சாலையில் லிம் வாடகை கார் ஒன்றை ஓட்டிச்சென்றதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் லிம் கட்டுப்பாடின்றி வாகனம் ஓட்டிக்கொண்டிருந்ததைக் கவனித்தார்.

அதன் பிறகு தெக் வையில் அவர் சாலையோரத் தடுப்பின்மேல் ஏறி இரு மூதாட்டிகள்மீது மோதினார். அதைத் தொடர்ந்து இருவரும் தரையில் விழுந்தனர். அப்போது லிம் சுயநினைவுடன் இருந்தபடி குழப்பநிலையில் இருந்தது காணப்பட்டது. அவரின் கையில் மின்சிகரெட் இருந்தது.

வழிப்போக்கர்கள் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டிகள் இருவரும் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு விபத்துக்கு உள்ளான 83 வயது மூதாட்டி உயிரிழந்தார். காயமுற்ற 84 வயது மூதாட்டியின் இடையிலும் இடது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

ரத்தத்தில் எட்டோமிடேட்

லிம் அன்றைய நாளே கைது செய்யப்பட்டார். அவரின் ரத்தத்தில் எட்டோமிடேட் கலந்திருந்தது தெரியவந்தது.

விபத்து நிகழ்வதற்கு சற்று முன்னர் தான் சுயநினைவை இழந்ததாக லிம் கூறியதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. தான் விபத்தில் சிக்கியதாக ஒருவர் தன்னை எழுப்பியதாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்