தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி கையெழுத்திட்ட ஆடவருக்குச் சிறைத் தண்டனை

1 mins read
eee80321-2a29-4c19-bd7c-7ab6ac10cf52
தேசிய நூலக வாரியத்தின் புதுபிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த மா லாய் ஃபாட் போலி ஆவணங்களில் கையெழுத்திட்டதற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய நூலக வாரியத்தின் புதுபிப்புப் பணிகளைத் துரிதமாக முடிப்பதற்காக பொறியாளர் நிபுணரின் கையெழுத்தை ஆவணங்களில் இட்ட திட்ட ஆலோசனை நிறுவன ஊழியருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) விதிக்கப்பட்டுள்ளது.

பூகிஸில் உள்ளா தேசிய நூலக வாரியத்தின் அடித்தள வேலைகளுக்காக 56 வயது மா லாய் ஃபட் போலியான கையெழுத்துகொண்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

2022ஆம் ஆண்டு புதுபிப்புப் பணிகளுக்காக தேசிய நூலக வாரியம் பி அன்ட் ஏ லிங் (P&A Link) நிறுவனத்தை நாடியது. அதையடுத்து பி அன்ட் ஏ லிங் நிறுவனம் புதுபிப்புப் பணிகளுக்காக மார்கிடெக்ட்ஸ் (Marchitects) எனும் திட்ட ஆலோசனை நிறுவனத்தைப் பணியில் ஈடுபடுத்தியது.

மா அப்போது மார்கிடெக்ட்ஸ் நிறுவனத்தின் ஊழியராக இருந்தார். மா, தீ பாதுகாப்பு நெறிமுறைகளுக்கான சான்றிதழ்களை வழங்க தகுதிபெற்ற முதன்மை பொறியாளர்களுடன் தொடர்பில் இருந்தார்.

குறிப்பிட்ட ஒரு பகுதியில் தெளிப்பான்களைப் பொருத்த தேவையில்லை என்று எண்ணிய பி அன்ட் ஏ லிங் நிறுவனம் மார்கிடெக்ட்ஸ் நிறுவனத்திடம் அதுகுறித்து முதன்மை பொறியாளரிடம் ஆவணத்தைப் பெற்றுத் தரும்படி கேட்டது.

2021ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மா கடிதம் ஒன்றைத் தயாரித்து முதன்மை பொறியாளரின் கையெழுத்தை அதில் இட்டார்.

போலி ஆவணங்களைக் கொடுத்ததற்கு மாவுக்கு அதிகப்டசம் நான்காண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்