எதிர்காலத்தில் சுகாதாரப் பரா மரிப்புத் துறை வேலைகளுக்கு பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
புளூம்பெர்க்கின் எம்எல்ஐவி பல்ஸ் நடத்திய அண்மைய ஆய்வில் தங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் கால் பதிப்பது குறித்து பெற்றோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பலர் கூறியுள்ளனர்.
தற்போது தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டுமானால் சுகாதாரப் பராமரிப்பு வேலை களுக்குச் செல்வது நல்லது என்பது நாற்பது விழுக்காட்டினரின் கருத்தாகும்.
மருத்துவத் துறையில் உள்ள பெரும்பாலான வேலைகள் மனிதர்களுக்கு இடையிலானவை. அவற்றை 'சாட்ஜிபிடி' போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் மாற்ற முடியாது. ஒரு மருத்துவராகவோ அல்லது தாதியராகவோ வேலை செய்வது இளைய தலைமுறையினருக்கு ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கும் என்று பலர் வலியுறுத்தியிருந்தனர்.
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் மூப்படையும் மக்கள் தொகை அதிகரிப்பதே இதற்கு காரணம்.
ஆனால் முதலீட்டாளர்கள் மாறுபட்ட யோசனையைத் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப வேலைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், அமேசான், ஆல்ஃபபெட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பெருமளவில் ஊழியர்கள் நீக்கப்பட்டாலும் தொழில்நுட்பத்திற்கான தேவை குறையாது. செயற்கை நுண்ணறிவு ஆபத்தாக விளங்குகிறது. அதே சமயத்தில் மின்னிலக்கத் தளங்கள் கூடி வருவதால் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்த இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் அதிகளவு சம்பளம் வழங்கும் துறையாக நிதித் துறை இருக்கும். இதற்கு அடுத்ததாக மிக நெருக்கமாக தொழில்நுட்பத் துறை உள்ளது என்று சேலஞ்சர் மனிதவள ஆலோசனை நிறுவனத்தின் உதவித் தலைவர் கிரே அண்ட் கிறிஸ்மஸ் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு தலை தூக்கினாலும் தொழில்நுட்பம், நிதி ஆகிய இரண்டு துறைகளிலும் அடுத்த 20 அல்லது முப்பது ஆண்டுகளுக்கு பிரகாசமான வேலை வாய்ப்புகள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏறக்குறைய 556 முதலீட்டு நிபுணர்களில் 52 விழுக்காட்டினர் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பமே சிறந்த எதிர்காலத்தை வழங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் 122 சில்லறை முதலீட்டாளர்களில் 42 விழுக்காட்டினர் தொழில்நுட்பத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

