சிங்கப்பூரில் வேலைகள்: “என் வேலை எனக்கு கொடுத்த அதிகாரமும் பிடிப்பும்”

சிங்கப்பூரில் வேலைகள்: “என் வேலை எனக்கு கொடுத்த அதிகாரமும் பிடிப்பும்”

3 mins read
தனது 40களில் ஒரு புதிய துறைக்குள் நுழைவது சுலபம் அன்று. ஆனால், திரு சௌந்தராஜன் செல்வராஜ் எடுத்த இம்முடிவு அவருக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் உணர்கிறார்.
7ed40903-0d64-4905-aee9-398183844293
“லோன்சா” நிறுவனத்தின் இணை இயக்குநராக, துவாஸில் நடைபெறும் நிர்வாக செயல்பாடுகளை மேற்பார்வையிடும் திரு சௌந்தராஜன் செல்வராஜ். - படம்: பொருளியல் வளர்ச்சிக் கழகம்

தற்போது “லோன்சா” நிறுவனத்தின் இணை இயக்குநராக, துவாஸில் நடைபெறும் நிர்வாக செயல்பாடுகளை திரு. சௌந்தரராஜன் மேற்பார்வையிடுகிறார். தனது 49ஆம் வயதில் சிங்கப்பூரின் வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தில் பங்கேற்ற அவர், அத்திட்டம் எவ்வாறு மின்னணுவியல் துறையிலிருந்து மருந்தாளர் துறைக்கு மாறும் புதிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

1. எப்படி ‘லோன்சா’ நிறுவனத்தில் வேலை செய்ய தொடங்கினீர்கள்? இங்கு வேலை செய்த அனுபவத்தை பற்றியும், ஒரு புதிய துறையில் வேலை செய்யும்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்களை பற்றியும் மேலும் விளக்குக.

எனது 40களில், மின்னணுவியல் துறையை விட்டுவிட்டு, மீண்டும் வகுப்பறைக்கு திரும்பி கல்வி கற்க வேண்டும் என்ற முடிவை நான் எடுத்தேன். வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தை முடித்த பிறகு,  சிங்கப்பூரின் புகழ்பெற்ற மருந்தக நிறுவனங்களில் ஒன்று, நிர்வாக செயல்பாடு நிபுணராக என்னை நியமித்தது. 

2013இல், நான் ‘லோன்சா’ நிறுவனத்தில் சேர்ந்த போது, திறன் வாய்ந்த இளையர்களோடு ஆற்றல் நிறைந்த சூழலில் பணிபுரிந்தேன். புதிய கருத்துகளை ஏற்றுக்கொண்டு புத்தாக்கத்தை வரவேற்கும் கலாச்சாரத்திற்கு இச்சூழல் வழிவகுத்தது. இம்முற்ப்போக்கு சிந்தனையும் ஆதரவளிக்கும் தலைமைத்துவமும் சிங்கப்பூர் பிரிவின் அதிவேக வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைந்தது.

உற்பத்தி நடைமுறைகளை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால் “லோன்சா” போன்ற மருந்து தயாரிப்பாளர்களுக்கு ஆபத்து அதிகம் (stakes are high). இப்படிப்பட்ட கடுமையான தரநிலைகளை கடைபிடிக்க அதீத மனவுறுதி தேவை. இளந்தலைமுறையோடு ஒன்றிணைந்து பணிபுரிய கற்றுக்கொள்ளவும் நேரமெடுத்தது.

இதற்கான தீர்வு? துடிப்புடன் என் இளைய சக ஊழியர்களோடு பணிபுரிந்தேன். அவர்களும் என் அனுபவத்தை மதித்து என் நுண்ணறிவை பாராட்டியதால், இரண்டு தரப்புக்கும் ஆக்ககரமான சூழலை இது உருவாக்கியது.

2. உங்கள் பொறுப்பின் சிறப்பு என்ன? இளம் வயதில் இருக்கும் திரு. சுந்தரராஜனை பார்த்தால், அவரிடம் என்ன சொல்வீர்கள்?

தற்போது 64 வயதில், நான் பாதி ஓய்வு பெற்ற நிலையில் இருக்கிறேன். நிர்வாகத்தின் குறிக்கோள்களுக்கும் காலக்கேடுகளுக்கும் ஏற்றவாறு என் தனிப்பட்ட அட்டவணையை அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் எனக்கு உண்டு. வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலையை காணவும் என் குடும்பத்தினரோடு நேரம் செலவிடவும் இது உதவுகிறது.

-

என் வாழ்க்கை பயணத்தில், மாற்றத்தை தழுவி வாழ்வதன் அவசியத்தை புரிந்துகொண்டேன். போட்டித்தன்மை மிக்க பரபரப்பான இன்றைய உலகில், தொடர்ந்து  இவ்வுலகிற்கு ஏற்ப தம்மைப் புதுப்பித்துக் கொள்வதும் முக்கியம். அதே நேரத்தில், வாழ்வின் அழகை ரசிப்பதும் தேவை. கடினமாக உழைத்து, தொடர்ந்து புதியதை கற்றுக்கொண்டு தம்மை மேம்படுத்திக்கொள்ளும் அதே நேரத்தில், வாழ்க்கையை ஆனந்தமாக வாழ வேண்டும்.

3. ஒரு 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றால், நீங்கள் இந்நிறுவனத்தில் இப்பொறுப்பில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த்திருப்பீர்களா? உங்கள் வயதை சார்ந்த சிங்கப்பூரர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

20 ஆண்டுகளுக்கு முன்பு, என் வேலையை விட்டுவிட்டு வகுப்பறைக்கு திரும்பி செல்லும் என் முடிவு, மீண்டும் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் நிறைந்த ஒரு நிலையற்ற சூழலுக்கு என்னை தள்ளியது. என் குடும்பத்தின் ஆதரவும், சிலரின் வழிகாட்டுதலும், சக ஊழியர்களோடு இருந்த நட்பும் நம்பிக்கையுமே நான் இன்று இப்பொறுப்பில் இருக்க காரணம்.

-

உங்களுக்கு வயதாகிவிட்டது என்று எண்ணம் உங்களுக்கு இருந்தால், உங்கள் நடத்தை இவ்வெண்ணத்தால் பாதிக்கப்படும். வாழ்க்கையை ரசிக்கவும் ஆனந்தமாக கழிப்பதும் மிக அவசியம்.

4. சிங்கப்பூரர்கள் எதிர்கால வேலைகளுக்கு தயாராக இருக்கின்றனர் என்பதை அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்துவது?

இளைஞர்கள் தங்கள் ஆர்வத்தை கண்டறிய நம் அரசாங்கம் வழிகாட்ட வேண்டும். ஆற்றல் நிறைந்த இவ்விளைய தலைமுறையினருக்கு கற்பனை ஆற்றல் அதிகம். அதை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு. வாழ்நாள் கற்றலையும் தனிமனித மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் ஒரு சூழலை உருவாக்குவதன் மூலம், இளம் சிங்கப்பூரர்களை நாம் உயர்த்தலாம். இவ்வணுகுமுறை தனிமனித மேம்பாட்டை மட்டுமன்று, புத்தாக்கமும் மீளுந்தன்மையும் நிறைந்த கலாச்சாரத்தை ஊக்குவித்து நம் சமூகம் பயனடையவும் வழிவகுக்கிறது.

குறிப்புச் சொற்கள்