தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் டாக்சி சேவை முன்பதிவுகள் குறித்து விசாரணை

1 mins read
70ad9cad-3481-4c15-b216-71cab1796067
‘கும்முத்தே’யைப் பொறுத்தவரை, இந்த முன்பதிவுச் சேவை மூலம் உரிமம் பெற்ற ஜோகூர் பாரு - சிங்கப்பூர் டாக்சிகளை மலேசியத் தீபகற்பத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பயணிகள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: கும்முத்தே/ஃபேஸ்புக்

ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான டாக்சி சேவைக்கு மலேசியப் போக்குவரத்துச் சேவை செயலி ‘கும்முத்தே’ இணையம் மூலம் முன்பதிவுச் சேவையைத் தொடங்கியுள்ளது.

இந்தச் சேவைக்கு ‘சிபி டாக்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதை செம்படர் 30ஆம் தேதியன்று ‘கும்முத்தே’ செயலி தொடங்கியது.

‘கும்முத்தே’யைப் பொறுத்தவரை, இந்த முன்பதிவுச் சேவை மூலம் உரிமம் பெற்ற ஜோகூர் பாரு - சிங்கப்பூர் டாக்சிகளை மலேசியத் தீபகற்பத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பயணிகள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூரில் உள்ள பான் சான் ஸ்திரீட் முனையத்துக்கு டாக்சி சேவை வழங்கப்படும் என்று அது கூறியது.

இந்நிலையில், இந்தச் சேவைக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) தெரிவித்துள்ளது.

‘கும்முத்தே’யின் இணையவழி டாக்சி முன்பதிவுச் சேவை குறித்து விசாரித்துத் தெளிவுபடுத்த மலேசியாவின் பொது நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து செயல்படுவதாக ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவில் உள்ள லார்க்கினுக்கு டாக்சி மூலம் செல்ல கம்ஃபர்ட்டெல்குரோ, ஸ்டிரைட்ஸ் பிரிமியர் ஆகிய போக்குவரத்து நிறுவனங்களுடன் இணையம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்