ஜூலை 1 முதல் சுயமாக இறக்குமதி செய்யும் மின்சாரப் பொருள்களுக்குக் கட்டுப்பாடு

ஜூலை 1 முதல் சுயமாக இறக்குமதி செய்யும் மின்சாரப் பொருள்களுக்குக் கட்டுப்பாடு

2 mins read
ஜூலை முதல் தேதியிலிருந்து சொந்தப் பயன்பாட்டிற்காக மின்சாரப் பொருள்களை இறக்குமதி செய்வோர், அவற்றை தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.
22a89036-dd7f-4681-b870-f028ed1e3a0a
வீடுகளும் வணிக நிறுவனங்களும் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யும் மின்சாரப் பொருள்களுக்கான புதிய விதிமுறை ஜூலை முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வருகிறது. - கோப்புப் படம்: சாவ் பாவ்

ஜூலை முதல் தேதியிலிருந்து வீடுகளும் வணிக நிறுவனங்களும் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யும் மின்சாரப் பொருள்கள், எரிசக்திச் சிக்கன விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

ஜூலை 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் புதிய விதிமுறையின்கீழ், குளிரூட்டி, துணி காய வைக்கும் இயந்திரம், வெந்நீர்க் கருவி, குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி மும்முனை மின்மோட்டார் ஆகிய ஆறு பொருள்கள் கட்டுப்படுத்தப்படும்.

தற்போது, சிங்கப்பூரில் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்படும் இத்தகைய பொருள்களுக்கு மட்டுமே கட்டாய எரிசக்தி முத்திரைத் திட்டம் (MELS), குறைந்தபட்ச எரிசக்தி பயன்பாட்டு தரநிலை (MEPS) ஆகிய விதிகள் பொருந்தும்.

இணையவழி வணிக வளர்ச்சியின் காரணமாக, பயனீட்டாளர்கள் எரிசக்தி சிக்கனமில்லாத மலிவான பொருள்களை நேரடியாக இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் புதன்கிழமை (ஜூன் 24) தெரிவித்தது.

எரிசக்திச் சிக்கனத் திறன் குறைவாக உள்ள பொருள்கள், எதிர்காலத்தில் பயனீட்டார்களுக்கு அதிக மின்கட்டணத்தையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதால் புதிய பதிவு நடைமுறைக்கு வருகிறது.

ஜூலை முதல் தேதியிலிருந்து சொந்தப் பயன்பாட்டிற்காகப் பொருள்களை இறக்குமதி செய்வோர், அவற்றை சிங்கப்பூருக்குள் கொண்டுவருவதற்கு முன்பாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். பதிவு இலவசம். சான்றிதழ் மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும்.

ஜூலை 1ஆம் தேதி முதல் தகுதியற்ற மின்சாரப் பொருள்கள் குறித்த விளம்பரங்களை இணையத்தளங்கள் உட்பட எங்கும் வெளியிடுவதற்கு அனுமதி இல்லை.

காட்சி விளம்பரங்களில். பொருள்களின் எரிசக்தி முத்திரை தெளிவாகக் காட்டப்பட வேண்டும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அனுமதிக்கப்பட்ட எரிசக்திச் சிக்கனத் தரம் கொண்ட பொருள்களை வாங்க வணிகங்கள் அரசாங்க மானியங்களைப் பயன்படுத்தலாம். குடும்பங்கள் பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்