ஜூன் 15: நடப்புக்குவரும் மறுஆய்வு செய்யப்பட்ட ‘குடும்ப அலுவலக’ கட்டமைப்பு

ஜூன் 15: நடப்புக்குவரும் மறுஆய்வு செய்யப்பட்ட ‘குடும்ப அலுவலக’ கட்டமைப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

14 Jun 2026 - 7:57 pm

1 mins read

சிங்கப்பூரில் ‘எஸ்எஃப்ஓ’ எனப்படும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமான குடும்ப அலுவலகங்களுக்கான மறுஆய்வு செய்யப்பட்ட கட்டமைப்பு திங்கட்கிழமையிலிருந்து (ஜூன் 15) நடப்புக்கு வருகிறது.

சிங்கப்பூர் நாணய ஆணையம் அதுகுறித்து இம்மாதம் 12ஆம் தேதி தெரிவித்தது.

தற்போதுள்ள ‘எஸ்எஃப்ஓ’ அலுவலகங்கள் புதிய நடைமுறைகளுக்கு மாற அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்படுவதாக ஆணையம் சொன்னது.

புதிய கட்டமைப்பு, ‘எஸ்எஃப்ஓ’ அலுவலகங்கள், சிங்கப்பூரில் அவற்றின் செயல்பாடுகளை நிறுவுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்குகிறது.

அவற்றின் ஆவண நடைமுறைகளையும் அது நெறிப்படுத்துகிறது.

தகுதிபெறும் ‘எஸ்எஃப்ஓ’ அலுவலகங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆணையத்திடம் தெரிவித்தால் போதுமானது. அத்துடன், ஆணையத்தின் உரிமம் பெற்ற வங்கியில் அவை கணக்கு வைத்திருக்கவேண்டும்.

நிர்வாகம், வங்கி பெயர் ஆகியவற்றின்கீழ் உள்ள மொத்த சொத்துகள் குறித்த விவரங்களையும் ‘எஸ்எஃப்ஓ’ அலுவலகங்கள் பதிவுசெய்யவேண்டும்.

சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கலந்துரையாடிய பிறகே கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்