கம்போங் கிளாம் கடைவீடுகளை வாங்குவோர் உள்ளூர்வாசிகளே: ஆணையம் விளக்கம்

கம்போங் கிளாம் கடைவீடுகளை வாங்குவோர் உள்ளூர்வாசிகளே: ஆணையம் விளக்கம்

1 mins read
c2569aeb-d1ac-48da-b869-3879db3848c0
கம்போங் கிளாம் வட்டாரக் கடைவீடுகளின் விற்பனை 60 விழுக்காடு குறைந்துவிட்டதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கம்போங் கிளாம் வட்டாரத்தில் உள்ள கடைவீடுகளின் விற்பனை அண்மைய ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துவிட்டதாகவும் அவற்றை வாங்குவோரில் பெரும்பாலானவர்கள் உள்ளூர்வாசிகளே என்றும் நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹாஜி லேன் உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான கடைவீடுகளை வெளிநாட்டினர் வாங்குவதாக டிக்டாக் காணொளிகளில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தத் தகவலுக்கு ஆணையம் பதிலளித்துள்ளது.

“இதுபோன்றக் குறைகூறல்கள் சொத்து மதிப்பு, மரபுசார்ந்த வர்த்தகங்களின் நிலைத்தன்மை, அந்த வட்டாரத்தின் கலாசார அடையாளம் ஆகியன மீதான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அக்கறை எழுந்துள்ளது,” என ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

கம்போங் கிளாம் வட்டாரக் கடைவீடுகளின் விற்பனை 2020 முதல் 2022 வரை 60 விழுக்காடு குறைந்துவிட்டதாகவும் அது தெரிவித்தது.

அந்தக் காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 15 பரிவர்த்தனைகள் மட்டுமே நிகழ்ந்தன. அதன் பின்னர், 2023க்கும் 2025க்கும் இடைப்பட்ட காலத்தில் அது மேலும் குறைந்து, ஆண்டுக்குச் சராசரியாக ஆறு பரிவர்த்தனைகள் கையாளப்பட்டதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்