கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2024

கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2024

2 mins read
62714e92-e4f7-43ad-b208-e75751bb77e6
பாடல் போட்டிகளின் முதல் சுற்று செப்டம்பர் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் தேசிய நூலகத்தில் நடைபெறும். - படம்: பிக்சாபே

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை நவம்பர் 24ஆம் தேதி நடத்தவிருக்கிறது. அதையொட்டி, இவ்வாண்டும் இரண்டு பிரிவுகளாகக் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் 14 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்படும்.

பாடல் போட்டிகளின் முதல் சுற்று செப்டம்பர் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் தேசிய நூலகத்தில் நடைபெறும்.

6 வயது முதல் 14 வயது வரை உடையோருக்கு ஒரு பிரிவாகவும் (பிறந்த தேதி 24.11.2010 முதல் 24.11.2018 வரை) 14 வயதுக்கு மேல் உடையோருக்கு (24.11.2010க்கு முன்னர் பிறந்தவர்கள்) ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும்.

கவியரசு கண்ணதாசன் இயற்றிய திரைப்பாடல்கள், http://singaporetamilwriters.com/kannadasan_contest/ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ள 60க்கு மேற்பட்ட பாடல்களில் ஏதாவது ஒரு பாடலைத் தேர்வுசெய்து பாட வேண்டும்.

இந்தப் போட்டியில் ஆண்கள் ஆண்குரல் பாடல்களையும் பெண்கள் பெண்குரல் பாடல்களையும் பாட வேண்டும். பட்டியலில் இல்லாத கண்ணதாசன் பாடல்களைப் பாட, எழுத்தாளர் கழகத்திடம் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும்.

இந்தப் போட்டியில் பங்கேற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகல் படிவத்தில் பதிவு செய்வதுடன், பாடலைப் பின்னணி இசையில்லாமல் பாட வேண்டும். தேர்வு சுற்றுக்கு முழுப் பாடலையும் பாட வேண்டியதில்லை. ஒருசில வரிகளை மட்டும் பாடினால் போதும்.

பதிவுசெய்ய வேண்டிய கூகல் இணைப்பு: https://forms.gle/a1smJgZHzEuDReMK7

இரு பிரிவுகளுக்கும் பாடகர்கள் பதிவுசெய்ய வேண்டிய இறுதி நாள் செப்டம்பர் 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை).

தேர்வு சுற்றிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் அறுவர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படுவர். இறுதிச் சுற்று பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சிங்கப்பூரில் பணிபுரியும்/வசிக்கும் (அடையாள அட்டை அல்லது வேலை அனுமதிச் சீட்டு உள்ளவர்கள்) யாரும் போட்டியில் பங்கேற்கலாம்.

பரிசுகள்

14 வயதிற்குக் கீழ்: மொத்தம் ஆறு பரிசுகள் வழங்கப்படும். பரிசுக்கேற்ற வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

14 வயதிற்கு மேல்: முதல் பரிசு $300, இரண்டாம் பரிசு $200, மூன்றாம் பரிசு $100, தலா $75 மதிப்புடைய மூன்று ஊக்கப் பரிசுகள்.

மேல்விவரங்களுக்கு www.singaporetamilwriters.com இணையத்தளத்தை நாடலாம். அல்லது கூகல் படிவத்தில் இடம்பெற்றுள்ளவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்