உருபாணர் குழுவின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் முதன்முறையாக அரங்கேற உள்ளது.
தமிழ்மொழி விழா 2026ல் ஆண்டுதோறும் அங்கம் வகிக்கும் கவிதை ஆர்வலர் அமைப்பான கவிமாலை நிகழ்ச்சியில் தொன்மையைத் தழுவியுள்ள அந்த இசைப் படைப்பு இடம்பெறுகிறது.
தமிழ்மொழியையும் பாரம்பரியத்தையும் ஒன்றிணைக்க முனையும் இந்நிகழ்ச்சி, ஏப்ரல் 26 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிமுதல் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி தொடங்குவதற்குமுன், பார்வையாளர்கள் காலை 10.15 மணிக்குள் தங்களது இருக்கைகளில் அமரவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் ராதிகா தினேஷ் கலந்துகொள்கிறார்.
தமிழ்ப் பாரம்பரியத்தின் செழுமையையும் மரபிசையின் இனிமையையும் வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த நிகழ்ச்சி இன்னிசையை வழங்க முற்படுகிறது.
கணையாழி விருது
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சான்றோர்க்குக் ‘கணையாழி விருது’, சிறந்த கவிதை நூலுக்கான ‘தங்கப் பதக்க விருது’, இளங்கவிஞருக்கான ‘தங்க முத்திரை விருது’, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களது வருகையை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இடங்கள் குறைவாக உள்ளதால் விரைவில் பதிவு செய்வது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவிற்கு https://tinyurl.com/5n6u7hhp நாடவும்.
தொடர்புக்கு: kavimaalaisg@gmail.com

