தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உறங்கும்போது கணவரைக் கொல்லப்போவதாக மிரட்டிய மாது

1 mins read
fdc8bee2-23e9-4766-a989-9a4360ab0d77
குற்றவாளியான ஜெசின்டா டான் சுவாட் லின். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிள்ளை வளர்ப்பு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் மோசமடைந்ததால் மாது ஒருவர் தனது கணவரை மிரட்டியிருக்கிறார்.

கணவர் தனக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாகக் காவல்துறையிடம் புகார் கொடுக்கப்போவதாக அந்த மாது மிரட்டினார். அதோடு, தந்தை உறங்கிக்கொண்டிருக்கும்போது தான் அவரைக் கொல்லப்போவதாகவும் அந்த மாது தனது பதின்ம வயது மகனிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான 50 வயது ஜெசின்டா டான் சுவாட் லின், அண்டை வீட்டில் வசித்த பெண்ணைத் தரையை சுத்தம் செய்யும் ‘மோப்’பால் தாக்கினார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ‘மோப்’பின் உலோகக் கம்பி உடையும் வரை டான் அண்டை வீட்டுப் பெண்ணைத் தாக்கியிருக்கிறார்.

அப்பெண் தனது வேண்டுகோளுக்கேற்ப நடந்துகொள்ளாததால் டான் அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரப்பட்டு தவறான செயலில் ஈடுபட்டது, வேண்டுமென்றே காயம் விளைவித்தது, தொந்தரவு இழைத்தது ஆகியவற்றின் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் வியாழக்கிழமையன்று (ஜனவரி 2) டான் ஒப்புக்கொண்டார். தொந்தரவு இழைத்தது, அவசரப்பட்டு தவறான செயலில் ஈடுபட்டு ஆகியவற்றின் தொடர்பிலான மேலும் இரு குற்றச்சாட்டுகளும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில்கொள்ளப்படும்.

இல்லத்தரசியான டான், டுடே போன்ற ஊடகங்களில் செய்தியாளராகப் பணியாற்றியவர்.

குறிப்புச் சொற்கள்