தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிடாடாரி பேருந்துச் சந்திப்பு நிலையம் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைப்பு

2 mins read
ab601769-6d3d-4571-a5fa-e086a31660cd
பிடாடாரி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்த பேருந்துச் சந்திப்பு நியைம் முதன்முதலாக 2021ஆம் ஆண்டு செயல்படக்கூடிய நிலையில் இருக்க திட்டமிடப்பட்டது - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லீ பேருந்துச் சந்திப்பு நிலையத்தை நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கும் பணி நீண்டகாலமாகவே தள்ளிப்போடப்பட்டு வந்தது.

அது தற்பொழுது நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு பூமிக்கு அடியில் பேருந்து முனையத்தை அமைக்கும் கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேறியதை அடுத்து நிலையம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிடாடாரி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்த பேருந்துச் சந்திப்பு நியைம் முதன் முதலாக 2021ஆம் ஆண்டு செயல்படக்கூடிய நிலையில் இருக்க திட்டமிடப்பட்டது.

இது குறித்து ஜனவரி 27ஆம் தேதி கேள்விகளுக்கு பதிலளித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், பேருந்துச் சந்திப்பு நிலையக் கட்டுமானப் பணிகளில் பொறியியல் துறைக்கு சவால்மிகுந்த ஒன்றாக விளங்கியதாகக் கூறியது. அதனால், கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் பிடித்ததாக தெரிவித்தது.

தற்பொழுது அந்தப் பேருந்துச் சந்திப்பு நிலையத்துக்கு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தற்காலிக பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கழகம் கூறியது.

“தற்போதைய நிலையில், பேருந்துச் சந்திப்பு நிலையத்தை ஆணையத்திடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது எப்பொழுது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல்களை நிலையம் தயார்நிலைக்கு வரும்போது ஆணையம் தெரிவிக்கும்,” என்று கழகம் தெளிவுபடுத்தியது.

உட்லீ வில்லேஜ் பகுதியில் உள்ள ஒன்றிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இந்த பேருந்துச் சந்திப்பு நிலையம் வரும். அங்கு 330 கழக புளோக்குகள், உணவு அங்காடி நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.

அங்கு அமைந்துள்ள தேவைக்கேற்ப கட்டப்படும் வீடமைப்பு திட்டம் உட்லீ ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும். இந்தத் திட்டத்தின்படி, 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு விடப்பட்டு அதன் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தன.

குறிப்புச் சொற்கள்