தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நவம்பர் 15ல் இவ்வாண்டின் கடைசிப் பெருநிலவு

1 mins read
6171f8b5-fa8e-46b4-906a-a65a421242f8
அக்டோபர் 17ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஜூரோங் ஏரித் தோட்டத்திலிருந்து காணப்பட்ட இவ்வாண்டின் மூன்றாவது பெருநிலவு. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த ஆண்டின் இறுதிப் பெருநிலவை (Supermoon) வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) இரவு காணலாம்.

ஆங்கில நாட்காட்டியின் ஒவ்வொரு மாதத்திலும் தோன்றும் முழுநிலவிற்கும் (பௌர்ணமி) தனித்துவமான பெயர்கள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், நவம்பர் மாதப் பெருநிலவு நீரெலிகளின் (Beavers) பெயரால் ‘பீவர்ஸ் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டின் இந்தக் காலகட்டத்தில் அவை மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்குவதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாத முழுநிலவு, பெருநிலவாகவும் அமைந்துள்ளதால் கூடுதல் சிறப்புப் பெறுகிறது.

பெருநிலவு என்பது நிலா பூமிக்கு வெகு அருகே வருவதால் மிகப் பெரிதாகவும் கூடுதல் ஒளியுடனும் காணப்படும்.

நவம்பர் 15ஆம் தேதி, நிலா பூமியிலிருந்து ஏறக்குறைய 360,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்று கூறப்பட்டது.

சிங்கப்பூர் வானில் மாலை 6.45 மணியளவில் நிலவு உதிக்கும். கிட்டத்தட்ட இரவு 7 மணிக்குப் பிறகு அதை நன்றாகக் காணமுடியும்.

சூரியன் மறைந்த பிறகு வானிலை ஒத்துழைத்தால், திறந்தவெளிப் பகுதிகளிலிருந்து இவ்வாண்டின் இறுதிப் பெருநிலவைக் காணமுடியும்.

அதற்கு அடுத்த பெருநிலவைக் காணச் சிங்கப்பூரர்கள் கிட்டத்தட்ட ஓராண்டு காத்திருக்க வேண்டும். 2025 அக்டோபரில்தான் அடுத்த பெருநிலவைக் காணலாம் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

குறிப்புச் சொற்கள்