தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மீண்டும் தலைதூக்கியுள்ள போலியான ‘பேரளவுக் கொள்முதல்’ மோசடிகள்

மே முதல் குறைந்தது 45 புகார்கள் பதிவு: கோ பெய் மிங்

2 mins read
eb0b7949-d4f3-4b8c-900e-f7481acb2717
மே முதல் செப்டம்பர் 15 வரை, சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம் செய்து புரியப்பட்ட மோசடிகள் குறித்து குறைந்தது ஆறு புகார்களைக் காவல்துறை பெற்றுள்ளது. - படங்கள்: முகமது ஷஸைன் ஃபைஹா முஸ்லிம் ஃபுட் பேரடைஸ்/ஃபேஸ்புக், கிகி ஃபுளோரிஸ்ட்

இவ்வாண்டு மே முதல், போலியான ‘பேரளவுக் கொள்முதல்’ மோசடிகள் தொடர்பில் குறைந்தது 45 புகார்களைக் காவல்துறை பெற்றுள்ளது. இத்தகைய மோசடிகள் மீண்டும் தலைதூக்கிவிட்டதை இது குறிக்கிறது.

உள்துறை துணை அமைச்சர் கோ பெய் மிங் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) நாடாளுமன்றத்தில் இதைக் கூறினார். மோசடி செய்பவர்கள் சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகள் அல்லது பள்ளி ஆசிரியர்கள்போல் ஆள்மாறாட்டம் செய்து வருவதாக அவர் சொன்னார்.

மோசடிக்காரர்களின் நோக்கம் குறித்து பொத்தோங் பாசிர் தனித்தொகுதி எம்.பி. அலெக்ஸ் இயோ எழுப்பிய கேள்விக்கு திரு கோ பதிலளித்தார்.

“இந்த மோசடி வகை புதிதன்று. ஆனால், 2025 மே முதல், இதுபோன்ற மோசடிகளின் எண்ணிக்கை அண்மையில் மீண்டும் அதிகரித்துள்ளதைக் காவல்துறை கண்டறிந்துள்ளது,” என்று திரு கோ கூறினார்.

மே முதல் செப்டம்பர் 15 வரை, சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம் செய்து புரியப்பட்ட இதுபோன்ற மோசடிகள் குறித்து குறைந்தது ஆறு புகார்களைக் காவல்துறை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய கொள்முதல்களின் நம்பகத்தன்மையை வணிக உரிமையாளர்கள் சரிபார்க்க, சரிபார்ப்புக் கருவிகள் அல்லது பாதுகாப்பான வழிகளை உருவாக்க, பிற அமைப்புகளுடன் இணைந்து உள்துறை அமைச்சு செயல்படுகிறதா என்பது குறித்து எம்.பி. ஜேக்சன் லாம் கேட்டார்.

எல்லா வகையான மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளிலிருந்து வணிகங்களைக் காவல்துறையால் பாதுகாக்க முடியாது என்று திரு கோ கூறினார். மேலும், பொதுமக்களும் வணிகங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குற்றவாளிகள் தொடர்ந்து புதிய வழிகளை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதால், பொதுமக்களும் வணிகங்களும் இத்தகைய மோசடி வகைகளுக்கு எதிராக அதிக விவேகத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று திரு கோ கேட்டுக்கொண்டார்.

எழுத்துபூர்வ ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டாலொழிய, அரசாங்கத்தின் சார்பாக வேறொரு வணிகத்திற்கு பணம் செலுத்தும்படி, அரசாங்க அமைப்புகள் ஒருபோதும் வணிகங்களைக் கேட்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்