தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைவரின் உள்ளிருக்கும் ஒளியை அங்கீகரிப்போம்: அதிபர் தர்மன்

1 mins read
07cd381e-96e3-471c-a4ab-6beed61bda36
அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தர்மன் சண்முகரத்னம் அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மூலிகைகள் கலந்து தயாரிக்கப்படும் ‘மசாலாத் தேநீர்’ தமக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்ன அதிபர், இந்த தீபாவளிக்கு முடிந்தால் சுவையான மசாலாத் தேநீரை அருந்தும்படி புதன்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மசாலாத் தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளில் சாதிக்காயும் (nutmeg) ஒன்று. லேசான இனிப்புச் சுவை கொண்ட இந்த மூலிகை இஸ்தானா தோட்டத்தில் வளர்கிறது என்று திரு தர்மன் கூறினார்.

ஒருகாலத்தில் சாதிக்காய் மரங்கள் நிறைந்திருந்த பகுதியில்தான் தற்போது இஸ்தானா அமைந்திருப்பதாகச் சிலர் கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், இப்போதும் இஸ்தானாவில் அந்த மரங்களைக் காணமுடியும் என்றார்.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குச் சிங்கப்பூரில் சாதிக்காய் மரம் எதுவும் இல்லை. பின்னர் அமரர் லீ குவான் யூவின் பரிந்துரையின்பேரில் 1980களின் இறுதியில் அது இஸ்தானா தோட்டத்தில் மீண்டும் வளர்க்கப்பட்டது. அந்த இடத்தின் வரலாற்றுடன் சாதிக்காய் மரத்திற்குத் தொடர்பிருப்பதைக் கருத்தில்கொண்டு அமரர் லீ அவ்வாறு பரிந்துரைத்தார் என்று அதிபர் தமது பதிவில் கூறியுள்ளார்.

உலகெங்கும் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள ஒளியை அங்கீகரிப்போம் என்று அதிபர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்