ஆர்ச்சர்ட் கேட்வே கடைத்தொகுதியில் உள்ள library@orchard நூலகம் மறுசீரமைப்புப் பணிக்காக வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் மூடப்படும் என்று தேசிய நூலக வாரியம் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்புப் பணி 2026ஆம் ஆண்டுவரை கட்டங்கட்டமாக நடக்கும் என்று தேசிய நூலக வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நூலகங்களை மேலும் சிறப்பாக வடிவமைக்கவும், புதிய சேவைகளையும் அனுபவங்களையும் வாசகர்களுக்கு தரும் விதமாகவும் தேசிய நூலக வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் இந்த மறுசீரமைப்புப் பணி நடக்கிறது.
library@orchard நூலகம் ஆர்ச்சர்ட் கேட்வே கடைத்தொகுதியில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மறுசீரமைக்கப்பட்ட நூலகத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு எனத் தனிப் பிரிவும் இருக்கும். மேலும் தொழில்நுட்பம் கலந்த அனுபவங்கள் மூலம் வாசகர்களை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நூலகம் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நூலகம் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
library@orchard நூலகத்தில் உள்ள கலைப் படைப்புகள் மத்திய கலை நூலகத்திற்கு அனுப்பப்படும்.
மத்திய கலை நூலகம் 2024ஆம் ஆண்டின் கடைசியில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய கலை நூலகம் தேசிய நூலகக் கட்டடத்தின் 5ஆம் தளத்தில் இருக்கும்.