பண்பாடுகளை இணைக்கும் இலக்கியப் பாலம்

சிங்கப்பூர் கவிதை விழா 2026

பண்பாடுகளை இணைக்கும் இலக்கியப் பாலம்

2 mins read
14b2bae0-e18a-4b4c-8ede-38baed35dfa2
நான்கு மொழி கவிதைகளைக் கொண்டாடும் சிங்கப்பூர்க் கவிதை விழா பேராசிரியர் எட்வின் தம்பு தலைமையில் 12வது ஆண்டாக நடைபெறுகிறது - படம்: சிங்கப்பூர்க் கவிதை விழா
multi-img1 of 2

நான்கு மொழிக் கவிதை விழாவான சிங்கப்பூர் கவிதை விழா 2026 வெள்ளிக்கிழமை (ஜூலை 24) தொடங்குகிறது.

விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் ‘தி பாட்’ (The Pod) அரங்கில் மாலை 6 மணி முதல் 7.30 மணிவரை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும். 

கலாசாரப் பதக்கம் பெற்ற பேராசிரியர் வாங் யூன் வா, ‘நன்யாங் கவிதைகள்’ குறித்தும் மொழிபெயர்ப்பு குறித்தும் சிறப்புரையாற்ற உள்ளார். தொடக்க விழாவில் உள்ளூர் மற்றும் அனைத்துலகக் கவிஞர்களின் கவிதை வாசிப்பு, பல்லூடகம் வழியிலான படைப்புகள், மொழிபெயர்ப்பு - கலைப் பரிமாற்றங்கள் குறித்த கலந்துரையாடல் ஆகியவையும் இடம்பெறும்.

சிங்கப்பூர்க் கவிதை விழா 12வது ஆண்டாக நடைபெறுகிறது. இவ்வாண்டு விழாவின் கருப்பொருள், ‘எல்லைகளும் பாலங்களும்’ (Borders and Bridges) என்பதாகும். ஞாயிற்றுக்கிழமைவரை நடைபெறவுள்ள இந்த மூன்று நாள் விழா, பல்வேறு மொழிகள், பண்பாடுகள், சமூகங்களை இணைக்கும் பாலமாகக் கவிதை விளங்குவதைக் கொண்டாடுகிறது.

சனி, ஞாயிறு இரு நாள்களிலும் கவிதை வாசிப்பு, பயிலரங்கு, உரையாடல் எனப் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நூலகத்தின் ‘தி பாட்’, 5வது மாடியில் உள்ள ‘இமேஜினேஷன்’ அறை, ‘பாசிபிலிட்டி’ அறை, பி1 தளத்திலுள்ள நிகழ்ச்சி அரங்கு ஆகிய இடங்களில் இந்நிகழ்வுகள் நடைபெறும்.

இசையும் கவிதையும்

விழாவின் முத்தாய்ப்பான தமிழ் நிகழ்வாக ‘இசையும் கவிதையும்’ அரங்கேறுகிறது.

சிங்கப்பூர் இளையர்களின் கவிதை வரிகளுக்குப் பிலிப்பீன்ஸின் புகழ்பெற்ற ‘மெகோசோனோ ஆர்க்கெஸ்ட்ரா’ (Mecosono Orchestra) குழுவினர் தங்களின் இன்னிசையால் உயிரூட்ட உள்ளனர்.

சனிக்கிழமை மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை தேசிய நூலகத்தின் பி1 தளத்திலுள்ள நிகழ்ச்சி அரங்கு 2இல் இந்நிகழ்ச்சி நடைபெறும். பத்துப் படைப்பாளர்களின் கவிச்சுவையைப் பல்வேறு இசைக்கருவிகளின் பின்னணி இசையோடு ரசித்து மகிழலாம்.

குறிப்புச் சொற்கள்