லிட்டில் இந்தியாவில் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை: ஆடவருக்குச் சிறை, பிரம்படி

லிட்டில் இந்தியாவில் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை: ஆடவருக்குச் சிறை, பிரம்படி

1 mins read
e594e7bc-5ed2-4b2c-8e5c-5be3d29591e8
மலேசியரான ‌ஷர்வீன் செட்டி, 35 வயது இந்தோனீசியப் பெண்ணை லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே உள்ள புதர்ப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்ததை இம்மாதம் (பிப்ரவரி) 4ஆம் தேதி ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எம்ஆர்டி நிலையத்தின் வெளியே பணிப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த 48 வயது ஆடவருக்கு 12 பிரம்படியோடு 12 ஆண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணிடம், ஆடவர் தாம் காவல்துறை அதிகாரி என்று பொய் கூறி ஏமாற்றியிருந்தார்.

மலேசியரான ‌ஷர்வீன் செட்டி, 35 வயது இந்தோனீசியப் பெண்ணை லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே (வெளிவாயில் எஃப்) உள்ள புதர்ப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்ததை இம்மாதம் (பிப்ரவரி) 4ஆம் தேதி ஒப்புக்கொண்டார். சம்பவம், 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி இரவு 8 மணியளவில் நடந்தது.

பாதிக்கப்பட்ட பெண், நண்பர்களுடன் இருந்தபோது செட்டி, அவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.

தீர்ப்பின்போது இன்னொரு பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டும் காவல்துறை அதிகாரியைப் போல் ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்