தீவெங்கும் களைகட்டிய தேசிய தின கொடி அலங்காரங்கள்

தீவெங்கும் களைகட்டிய தேசிய தின கொடி அலங்காரங்கள்

1 mins read
5a86d35b-503f-48fe-86c2-ba17d45d3875
நீ சூன் சவுத் வட்டாரத்தின் புளோக் 504ன் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் அமைந்துள்ள ‘எஸ்ஜி 61’ கொடி அலங்காரம். - படம்: யுகேஷ் கண்ணன்
Google News Preferred Icon

நாடு முழுவதும் தேசிய தின களிப்பில் திளைத்துவருகிறது. தேசத்தின் பிறந்தநாளையொட்டி தீவு முழுவதும் பல வகையான அழகிய, புத்தாக்கமிகு அலங்காரங்கள் காட்சியளிக்கின்றன.

அவற்றுள் சிலவற்றைத் தமிழ் முரசு அதன் வாசகர்களுக்காகக் கண்டறிந்தது.

தெங்கா சமூக மன்றத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரம்.
தெங்கா சமூக மன்றத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரம். - படம்: யுகேஷ் கண்ணன்

இவ்வாண்டு கொடி அலங்காரங்கள் பல வட்டாரங்களில் பொறுத்தப்பட்டிருப்பது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்ட தெங்கா சமூக மன்றத்தில் 31 தேசிய கொடிகள் ஒன்றாக தைக்கப்பட்டு, சிங்கப்பூரின் வயதான ‘61’ எனும் எண்ணின் வடிவில் அலங்காரம் பொருத்தப்பட்டுள்ளது.

நீ சூன் சவுத் வட்டாரத்தின் பிளோக் 504ன் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் அமைந்துள்ள கொடி அலங்காரத்தில் 72 கொடிகள் ஒன்றாக தைக்கப்பட்டு, ‘எஸ்ஜி 61’ என்ற வடிவில் அலங்காரம் பொருத்தப்பட்டுள்ளது.

தோ பாயோ லோரோங் இரண்டின் பிளோக் 122ல் அமைந்துள்ள ‘எஸ்ஜி 61’ கொடி அலங்காரம்.
தோ பாயோ லோரோங் இரண்டின் பிளோக் 122ல் அமைந்துள்ள ‘எஸ்ஜி 61’ கொடி அலங்காரம். - படம்: யுகேஷ் கண்ணன்

தோ பாயோ லோரோங் இரண்டின் பிளோக் 122ல் 75 தேசிய கொடிகள் ஒன்றாக கட்டப்பட்டு ‘எஸ்ஜி 61’ வடிவில் அலங்காரம் பொருத்தப்பட்டுள்ளது.

தோ பாயோ லோரோங் ஒன்றின் பிளோக் 107க்கும் 109க்கும் இடையே பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரம்.
தோ பாயோ லோரோங் ஒன்றின் பிளோக் 107க்கும் 109க்கும் இடையே பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரம். - படம்: யுகேஷ் கண்ணன்

தோ பாயோ லோரோங் ஒன்றின் பிளோக் 107க்கும் 109க்கும் இடையே 77 தேசிய கொடிகளுடன் அழகிய கொடி அலங்காரம் பொருத்தப்பட்டுள்ளது.

லிம்பாங் வட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள அலங்காரங்கள்.
லிம்பாங் வட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள அலங்காரங்கள். - படம்: யுகேஷ் கண்ணன்
லிம்பாங் வட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள அலங்காரங்கள்
லிம்பாங் வட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள அலங்காரங்கள் - படம்: யுகேஷ் கண்ணன்

லிம்பாங் வட்டாரத்தில் தட்டுகளாலான இரண்டு தேசிய கொடி வடிவங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வடிவத்திலும் 96 தட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பயனியர் வட்டாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தேசிய கொடி அலங்காரம்.
பயனியர் வட்டாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தேசிய கொடி அலங்காரம். - படம்: யுகேஷ் கண்ணன்

பயனியர் வட்டாரத்தில் மாறுபட்ட முறையில் பழைய முட்டை பெட்டிகளைக் கொண்டு தேசிய கொடி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 140 முட்டை பெட்டிகளுடன் இந்த வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்