சிங்கப்பூர் கலைஞர் டாபி “டாப்யாடோ” டான் (Toby “Tobyato” Tan) மற்றும் கட்டடக்கலை நிறுவனமான OWAA Architects இணைந்து புக்கிட் மேரா நகர நிலையத்தை (Town Centre) சீரமைக்கும் பணியில் இறங்கவுள்ளனர்.
புக்கிட் மேரா நகர நிலையத்தை சீரமைக்க அண்மையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டது. அதில் டாபியும் கட்டடக்கலை நிறுவனமும் இணைந்து தங்களது வடிவமைப்பு திட்டத்தை சமர்ப்பித்தனர்.
அக்குழுவின் திட்டம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சிந்தனையுடன் ஒத்துப்போனதால் சீரமைக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மலையின் பின்னணி, வாள்மீன் ஓவியக் கலை என புக்கிட் மேராவின் வரலாற்றை எடுத்துக்கூறும் விதமாக வடிமைப்பு உள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஒரு நகர நிலையத்தை சீரமைக்க போட்டி நடத்துவது இதுவே முதல்முறை. போட்டியை சிங்கப்பூர் கட்டடக்கலைக் கழகம் ஏற்று நடத்தியது.
டாபி மற்றும் கட்டடக்கலை நிறுவனத்தின் வடிவமைப்புக்கு 1,000க்கும் அதிகமானவர்கள் வாக்களித்தினர்.
புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் வசிப்பவர்களில் வாக்களித்த 70 விழுக்காட்டினர் டாபி மற்றும் கட்டடக்கலை நிறுவனத்திற்கு ஆதரவு தந்தனர்.
கிட்டத்தட்ட சிங்கப்பூரின் அனைத்து பகுதியில் இருந்தும் 2,000க்கும் அதிகமானவர்கள் வடிவமைப்புக்கு வாக்களித்தனர்.

