சிங்கப்பூரின் பிரபல ‘பேட்டிசரி’ (patisserie) வகை கேக் கடையான லூனா வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மூடப்படவுள்ளது.
செயல்பாட்டுச் செலவும் உணவுப் பொருள் செலவும் அதிகரிப்பது அதற்குக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதை வார்த்தைகளில் தெரியப்படுத்துவது சிரமமாக உள்ளது. 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியிலிருந்து லூனா செயல்படாது என்பதை மிகுந்த கவலையிடன் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று லூனா திங்கட்கிழமை (செப்டம்பர் 28) இன்ஸ்டகிராமில் தெரிவித்தது.
தனது கேக், டார்ட் வகை பிஸ்கட்டுகளை லூனா இணையத்தில் விற்றுவருகிறது. 111 சமர்செட் கட்டடத்தில் அமைந்துள்ள லூசின் பை லூனா என்ற அதன் நேரடி காப்பிக் கடையிலும் அவை விற்கப்படுகின்றன.
அந்தக் கடை 2024ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. லூனாவின் மூடல் லூசின் கடையைப் பாதிக்காது என்று லூனா பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
லூனாவின் முதல் நேரடிக் கடை 2020ஆம் ஆண்டு அமோய் ஸ்திரீட்டில் திறக்கப்பட்டது. ஆனால், 2025ல் அது அவ்விடத்தில் செயல்படுவதை நிறுத்தியது.
