சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள், அடுத்த நோய்ப்பரவலைச் சமாளிப்பதற்காக உருவாக்கிய பரிசோதனைக் கருவி தற்போது 90க்கும் அதிகமான நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
மல்டிபிளெக்ஸ் சரோகேட் வைரஸ் நியூடிரலைசேஷன் (multiplex surrogate virus neutralisation test) (எஸ்விஎன்டி) என்று அழைக்கப்படும் அந்தப் பரிசோதனைக் கருவி, பல்வேறு கிருமிகளை அழிக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி ஒருவரின் உடலில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவுகிறது.
அத்தகைய நோய் எதிர்ப்புச்சக்திகள் சார்ஸ், கொவிட்-19 போன்ற துரிதமாகப் பரவக்கூடிய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பைத் தருகின்றன.
இபோலா, ஹெனிபா கிருமி, நிபா போன்ற இதர கிருமி வகைகளைக் கண்டறிய எஸ்விஎன்டி பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்த முடியும்.
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் தொற்றக்கூடிய கிருமியால் எதிர்காலத்தில் நோய்ப்பரவல் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் நுண்கிருமி, நோய் எதிர்ப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர் டான் சீ வா தலையில் உள்ள குழு எஸ்விஎன்டி பரிசோதனைக் கருவியை உருவாக்கியது.
சமநிலைப்படுத்தும் எதிர்ப்புசக்தியைக் கணக்கிடும் ஆற்றல் என புதிய கருவியால் பல நன்மைகள் உள்ளது என்றார் குழுவில் உள்ள மருத்துவர் பேராசிரியர் வாங்.
ஒருவரின் நோய் எதிர்ப்புசக்தியைக் கணக்கிடுவதைக் கொண்டு புதிய தடுப்பு மருந்துகளின் செயல்பாட்டைத் தீர்மானிக்க முடியும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர். அதைக் கொண்டு எதிர்கால தடுப்பு மருந்துகளை இன்னும் வலுவானதாக உருவாக்க முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய பரிசோதனைக் கருவியை விலங்குகளுக்குப் பயன்படுத்தலாம் என்றார் டியூக்-என்யுஎஸ் மருத்துவ பள்ளியின் தொற்றுநோய் பிரிவின் பேராசிரியர் வாங் லின்ஃபா.
அது மிகவும் முக்கியமான அம்சம் என்ற அவர், சார்ஸ், கொவிட்-19 போன்ற நோய்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது எதிர்கால நோய்கள் விலங்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்றார்.
புதிய பரிசோதனைக் கருவிக்கு அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாக அமைப்பு 2020 நவம்பரில் அவசரநிலையில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது.