$127.6 மில்லியன் நன்கொடை வழங்கிய அறநிறுவனம்

2 mins read
fec88cbe-00fc-4327-865b-f40aacd39262
கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு லோ டக் வோங் அறநிறுவனம் 127.6 மில்லியன் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளது. - படம்: லீ குவான் யூ பொது கொள்கை பள்ளி

செல்வந்தர் லோ டக் வோங் பெயரில் தொடங்கப்பட்ட அறநிறுவனம், சிங்கப்பூரில் ஆக அதிக நன்கொடை வழங்கிய தனியார் நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.

சிங்கப்பூரில் பிறந்த லோ டக் வோங், நிலக்கரி தொழிலில் கொடிகட்டி பறந்தவர். இந்தோனீசியரான திரு லோ உலகின் ஆகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவர்.

லோ டக் வோங் அறநிறுவனம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அது 2023ஆம் ஆண்டு மட்டும் 127.6 மில்லியன் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அந்த நன்கொடைகளை லோ டக் வோங் அறநிறுவனம் கொடுத்தது. என்யூஎஸ் லீ குவான் யூ பொது கொள்கை பள்ளிக்கு மட்டும் அது 101 மில்லியன் வெள்ளி வழங்கியது.

மேலும் லோ டக் வோங் அறநிறுவனம், சிங்கப்பூரில் இவ்வட்டாரத்திலும் உள்ள மருத்துவமனைகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.

அறநிறுவனங்கள் தரும் நன்கொடைகளை கவனிக்கும் சாரிஸ்டிக் இம்பேக்ட் கலெக்டிவ் ( Soristic Impact Collective) அந்த தரவுகளை வெளியிட்டது.

மூன்றாவது ஆண்டாக ‘சாரிஸ்டிக் இம்பேக்ட் கலெக்டிவ்’ இத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் லீ பவுண்டே‌‌ஷன் (Lee Foundation) உள்ளது. அது கடந்த ஆண்டு 41.7 மில்லியன் வெள்ளி வழங்கியது. வறுமை ஒழிப்பு, கல்வி ஆகியவற்றுக்கும் பயன்படுத்த அந்த நிதியை அறநிறுவனம் வழங்கியது.

$431 மில்லியன் நன்கொடை

இந்நிலையில், கடந்த ஆண்டு மட்டும் 431 மில்லியன் வெள்ளி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு 220 மில்லியன் வெள்ளி நன்கொடையாக கிடைத்தது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 2023ஆம் ஆண்டு 96 விழுக்காடு அதிகமான நன்கொடை நிதி கிடைத்துள்ளது.

431 மில்லியன் வெள்ளியில் லோ டக் வோங் அறநிறுவனம் கிட்டத்தட்ட 30 விழுக்காடு நிதியை வழங்கியுள்ளது.

மூன்றாம் இடத்தில் உள்ள நீ ஆன் கொங்சி அறநிறுவனம் 36.2 மில்லியன் வெள்ளி கொடுத்தது. சிம்ஏ‌ஷியா பவுண்டே‌‌ஷன் 28 மில்லியன் வெள்ளி தந்தது.

ஐந்தாம் இடத்தில் உள்ள த மோ ஃபேமலி பவுண்டே‌‌ஷன் 23.5 மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்