தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிலேத்தார் விரைவுச் சாலையில் கவிழ்ந்த லாரி

1 mins read
948ed29d-b50c-44c4-9678-5fbde9eb9b88
சிலேத்தார் விரைவுச் சாலையில் கவிழ்ந்த நிலையில் இருக்கும் லாரி - படம்: சமூக ஊடகம்

புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலையில் ஒரு காருக்கும் லாரிக்கும் இடையே விபத்து ஏற்பட்டது.

வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின் (டிசம்பர் 6) இந்த விபத்து நடந்தது.

காரில் இருந்த 49 ஓட்டுநரும் 22 வயது பயணியும் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவ வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.

சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது. அதில் லாரி கவிழ்ந்து கிடந்தது. காரின் முன்பகுதி சேதமடைந்திருந்தது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்