கல்விக் கழகங்களைப் பிரதிநிதிக்கும் போலி மின்னஞ்சல் மூலம் $31,000 இழப்பு

கல்விக் கழகங்களைப் பிரதிநிதிக்கும் போலி மின்னஞ்சல் மூலம் $31,000 இழப்பு

1 mins read
8bc03381-17f4-4897-b9ac-431e2f80cf23
பள்ளிக் கட்டணங்களை அவசரமாகச் செலுத்தும்படி பாதிக்கப்பட்டோருக்குப் போலியான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூர்க் கல்விக் கழகங்களைப் பிரதிநிதிப்பதைப் போல் வந்த போலி மின்னஞ்சல்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூன்று வாரங்களுக்குள் $31,000யை இழந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் மட்டும் அத்தகைய மோசடி குறித்து குறைந்தது 20 புகார்கள் அளிக்கப்பட்டன.

பள்ளிக் கட்டணங்களை அவசரமாகச் செலுத்தும்படி பாதிக்கப்பட்டோருக்குப் போலியான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

சக மாணவர்களிடமிருந்து திருடப்பட்ட கணக்குகள், கல்விக் கழகங்களைப் போல தென்படும் கணக்குகள் ஆகியவை மூலம் போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.

மாணவர்கள் உடனடியாகப் பணத்தைக் கொடுக்கப்பட்ட வங்கிக்கு அனுப்பவேண்டும் என்றும் அனுப்பத் தவறும் மாணவர்கள்மீது பள்ளியின் சட்டப் பிரிவிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பணத்தை அனுப்பிய மாணவர்கள் கல்விக் கழகங்களிடம் அதுகுறித்து விசாரிக்கும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்டனர்.

கல்விக் கழகங்களுக்குப் பணம் அனுப்பும்முன் அதுகுறித்து சரியாக விசாரிக்கும்படி காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அறிமுகம் இல்லாதவர்களுக்கும் பணம் அனுப்புவதைத் தவிர்க்கும்படியும் அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்