சிங்கப்பூரில் அடுத்த மூன்று மாதங்களுக்கு குறையும் மின்கட்டணம்

சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கான மின்சாரக் கட்டணத்தில் விலைக்குறைவை எதிர்பார்க்கலாம்.

முதல் காலாண்டான ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதத்திற்கான கட்டணத்தில் சராசரியாக 5.4 விழுக்காடு விலைக்குறைவு இருக்கும் என்று எஸ்பி குரூப் தெரிவித்தது.

புதிய விலையின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணங்களில் பொருள் சேவை வரி சேர்க்கப்படாமல் ஒரு கிலோவாட்டிற்கான விலை 27.43 காசாக இருக்கும். தற்போது அது 28.95 காசாக உள்ளது. 

மின்கட்டணத்திற்குப் பொருள் சேவை வரி சேர்த்தால் 29.62 காசுகள். தற்போது அது 31.27 காசாக உள்ளது.

புதிய விலையால் நாலறை வீவக வீட்டில் வசிக்கும் குடும்பத்திற்குப் பொருள் சேவை வரி சேர்க்கப்படாமல் மின்கட்டணத்தில் சராசரியாக 4.69 வெள்ளி குறையும்.  

பொதுவாக நாலறை கொண்ட வீவக வீட்டின் பொருள் சேவை வரி சேர்க்கப்படாமல் சராசரி மாத மின்கட்டணம் 89.32 வெள்ளியாக உள்ளது. 

சிங்கப்பூரில் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக மின்கட்டணங்கள் குறைந்துள்ளன.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!