நிலப் போக்குவரத்து ஆணைய அமலாக்க அதிகாரி தமது மோட்டார்சைக்கிளில் இளையர் ஒருவரை ஜூன் 4ஆம் தேதியன்று துரத்திச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஜூலை 18ஆம் தேதி அந்த இளையர் மீது ஏழாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இளையர் தனது சிங்பாஸ் கணக்குக்கான விவரங்களை அறிமுகமில்லாத ஒருவரிடம் ‘டெலிகிராம்’ தளத்தின் வழியாக 2023ஆம் ஆண்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
தான் வழங்கிய விவரங்களுக்காக $300 கடன் கிடைக்கும் என்று இளையருக்கு அந்த நபர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சொன்னபடி பணம் கிடைத்ததா என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.
பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுடன் ஆயுதம் வைத்திருத்தல், போதைப்பொருள் உட்கொள்ளுதல் ஆகியவை தொடர்பில் மற்ற ஆறு குற்றச்சாட்டுகளும் இளையர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் உட்கொண்டபோது இளையருக்கு 17 வயது என்பதால் அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
இளையர்மீதான வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி விசாரிக்கப்படும்.
இதற்கிடையே, தன்னுடைய தாயார் வீட்டில் தனியாக இருப்பதால் பிணை தொடர்பாக தனக்கு விதிக்கப்பட்ட ஆணையை மறுஆய்வு செய்யுமாறு 18ஆம் தேதி அந்த இளையர் நீதிமன்றத்தில் கோரினார். இதன் தொடர்பில் ஜூலை 22ஆம் மறுஆய்வு செய்திட நீதிபதி ஒப்புதல் வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது தடுப்புக்காவலில் உள்ள இளையர், காணொளி இணைப்புவழி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.