சிங்கப்பூரில் செயல்பாடுகளை நிறுத்தும் டிஸ்னியின் லுகாஸ்ஃபிலிம்

சிங்கப்பூரில் செயல்பாடுகளை நிறுத்தும் டிஸ்னியின் லுகாஸ்ஃபிலிம்

1 mins read
262fca81-dab0-4b43-92ff-861ac93ba8ea
தொழில்துறையிலும் தொழில் நிலவரங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் லுகாஸ்ஃபிலிம் சிங்கப்பூரில் அதன் செயல்பாடுகளை நிறுத்துவதாக பொருளியல் வளர்ச்சிக் கழகமும், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் கூறின. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டிஸ்னியின் லுகாஸ்ஃபிலிம் நிறுவனம் சிங்கப்பூரில் அதன் செயல்பாடுகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருகிறது.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இங்கு செயல்படும் அந்த நிறுவனம், பொருளாதாரக் காரணங்களாலும், தொழில்துறையிலும் தொழில் நிலவரங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் அதன் செயல்பாடுகளை நிறுத்துவதாக டிஸ்னி கூறியது.

டிஸ்னி அதன் உலகளாவிய ஊழியரணியில் 7,000 வேலைகளை நிறுத்தப்போவதாக கடந்த பிப்ரவரியில் கூறியிருந்தது. US$5.5 பில்லியன் டாலர் செலவுகளை மிச்சப்படுத்தவும் அதன் தொழிலில் லாபம் பெறுவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதி அது என்று டிஸ்னி தெரிவித்தது.

தொழில்துறையிலும் தொழில் நிலவரங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் லுகாஸ்ஃபிலிம் சிங்கப்பூரில் அதன் செயல்பாடுகளை நிறுத்துவதாக பொருளியல் வளர்ச்சிக் கழகமும், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மற்ற நிறுவனங்களில் வேலைகளைத் தேட லுகாஸ்ஃபிலிம் நிறுவனமும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளும் உதவி வருவதாகக் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்களுக்கு மறுபயிற்சியும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளும் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்