தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையத்தில் விலை உயர்ந்த பொருள்களுக்குத் தீர்வை செலுத்தாத 115 பயணிகள்

1 mins read
b1317f85-5775-4f1a-ab64-a9404cc45bbc
படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை -

சாங்கி விமான நிலையத்தில் விலை உயர்ந்த பைகள், சிகரெட்டுகள், மதுபானங்கள் உள்ளிட்ட பொருள்களுக்குத் தீர்வை செலுத்தாமல் பயணம் செய்த பயணிகளை அதிரடிச் சோதனை மூலம் அதிகாரிகள் பிடித்தனர்.

விமான பயணங்கள் உச்சத்தில் இருக்கும் காலமான ஜூன் மாதம் தொடங்கவுள்ள நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை நடத்தியுள்ளனர்.

சிங்கப்பூர் சுங்கத்துறையினரும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் இணைந்து நடத்திய கூட்டு சோதனை மே 15க்கும் மே 21க்கும் இடையில் நடந்தது.

சோதனையில் 115 பயணிகள் பொருள்கள் குறித்து அதிகாரிகளிடம் அறிவிக்கத் தவறியது, தீர்வை செலுத்தாதது, தகுந்த பொருள் சேவை வரி செலுத்தாதது போன்ற காரணங்களுக்காக பிடிபட்டனர்.

தீர்வை, பொருள் சேவை வரி மூலம் 18,491 வெள்ளி, அபராதம் மூலம் கிட்டத்தட்ட 28,000 வெள்ளி வசூலிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்