சூடுபிடிக்கும் அதிசொகுசு கூட்டுரிமை வீடு விற்பனை

சூடுபிடிக்கும் அதிசொகுசு கூட்டுரிமை வீடு விற்பனை

1 mins read
fff17dc9-b431-402b-89f4-dfeef7ad6d45
18 டாம்லின்சன் சாலையில் உள்ள பார்க் நோவா கூட்டுரிமை வீடுகள் (இடது). ஆண்டர்சனில் உள்ள எண் 21 ஆண்டர்சன் கூட்டுரிமை வீடுகள் (வலது). - படங்கள்: ‌ஷுன் டெக் ஹோல்டிங்ஸ், கெங் லியோங்

அதிசொகுசு கூட்டுரிமை வீடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் சாதனை அளவாக 17 அதிசொகுசு கூட்டுரிமை வீடுகள் விற்பனை ஆகியுள்ளன.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் ஏழு அதிசொகுசு கூட்டுரிமை வீடுகள் விற்பனையாகின. 2023ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 15 வீடுகளும் 2022இன் முதல் காலாண்டில் 14 வீடுகளும் விற்கப்பட்டன.

இவ்வாண்டு ஜனவரியிலிருந்து மே 22ஆம் தேதி வரை சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் $10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய 24 அதிசொகுசு கூட்டுரிமை வீடுகள் விற்பனையாயின. கடந்த ஆண்டின் முதலாண்டில் அத்தகைய 17 வீடுகள் விற்பனையாகின.

அவற்றுள் தனித்து நிற்கிறது டாம்லின்சன் சாலையில் உள்ள பார்க் நோவா கூட்டுரிமை வீடு. அது, ஒரு சதுர அடிக்கு $6,593 என $38.888 மில்லியனுக்குக் கைமாறியது.

எண் 21 ஆண்டர்சனில் $20 மில்லியன் மதிப்பிலான 4 கூட்டுரிமை வீடுகள் விற்கப்பட்டன.

சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்திக்கான வளர்ச்சி முன்னுரைப்பு பூஜ்ஜியத்திலிருந்து 2 விழுக்காடாக இருந்தபோதும் அதிக விலையுள்ள கூட்டுரிமை வீடுகள் விற்பனையாகின.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் விற்கப்பட்ட 17 அதிசொகுசு கூட்டுரிமை வீடுகளில் ஐந்து வீடுகளைச் சிங்கப்பூரர்கள் வாங்கினர். எட்டு வீடுகள் நிரந்தரவாசிகளால் வாங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்