தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு வயதுப் பிள்ளையை 20க்கும் மேற்பட்டமுறை துன்புறுத்திய பணிப்பெண்

2 mins read
aae42f1d-eaec-4178-8b7e-2f79be115735
நுகம் லோரேடா தல்போ என்னும் அந்த 30 வயது பிலிப்பீன்ஸ் பணிப்பெண் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம்வரை துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாத பணிப்பெண் ஒருவர் தமது முதலாளியின் ஒரு வயது ஆண் குழந்தையை 20க்கும் மேற்பட்ட முறை துன்புறுத்தியுள்ளார்.

நுகம் லோரேடா தல்போ என்னும் அந்த 30 வயது பிலிப்பீன்ஸ் பணிப்பெண் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம்வரை துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

தூங்கும் நேரத்தில் குழந்தை அழுது தனது தூக்கத்தைக் கெடுத்ததால் கோபப்பட்டு அடித்ததாக நுகம் விசாரணையின்போது தெரிவித்தார்.

தம்மீது சுமத்தப்பட்ட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைப் புதன்கிழமை (ஜூலை 16) நுகம் ஒப்புக்கொண்டார்.

2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து நுகம் அந்தக் குழந்தையின் வீட்டில் வேலை செய்யத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட 11 மாதங்கள் அந்த வீட்டில் வேலை செய்த அந்தப் பணிப்பெண் குழந்தையின் அறையிலேயே வசித்தும் உள்ளார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி குழந்தை பராமரிப்பு ஆசிரியர் ஒருவர் பிள்ளையின் உடலில் காயம் இருந்ததைக் கண்டார்.

அதன்பின்னர் பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்தார்.

2024ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி குழந்தை திடீரெனக் கதறி அழுதது. உடனடியாகக் குழந்தையின் பெற்றோர் கண்காணிப்பு கேமராவைப் பார்த்தனர்.

அதில் பணிப்பெண் குழந்தையைத் துன்புறுத்தியது தெளிவாகத் தெரிந்தது. மேலும் மற்ற சில நாள்களில் உள்ள காட்சிகளையும் குழந்தையின் பெற்றோர் ஆராய்ந்தனர். அதிலும் குழந்தையைப் பணிப்பெண் துன்புறுத்தியது பதிவாகி இருந்தது.

அதன்பின்னர் குழந்தையின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.

நுகத்திற்குக் குழந்தைகள் உள்ளதாகவும் அவர்கள் பிலிப்பீன்ஸில் உள்ளதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குற்றஞ்சாட்ட நுகம் சிங்கப்பூரில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார்.

பணிப்பெண்ணுக்கு ஜூலை 30ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்