முதலாளியின் ஒரு வயது ஆண் குழந்தையைத் தொடர்ந்து பலமுறை துன்புறுத்திய குற்றத்துக்காகப் பணிப்பெண் ஒருவருக்குப் புதன்கிழமை (ஜூலை 30) இரண்டு ஆண்டுகள், ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குழந்தையின் அழுகையால் தமது தூக்கம் தடைபட்டதாகவும் அதன் காரணமாகத் தாம் விரக்தி அடைந்ததாகவும் பிலிப்பீன்சைச் சேர்ந்த 30 வயது நுக்கோம் லொரேட்டா டால்போ விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
குழந்தையைத் துன்புறுத்தியதை ஜூலை 16ஆம் தேதியன்று அவர் ஒப்புக்கொண்டார்.
2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குழந்தையை அவர் பலமுறை துன்புறுத்தினார்.
குழந்தையை அவர் 20க்கும் மேற்பட்ட முறை கொடுமைப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
Please include this: for repeatedly abusing her employer’s one-year-old son by hitting his head, slapping his face, pulling his hair and pinching his ear
டால்போ, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். குழந்தையின் குடும்பத்துக்காக அவர் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 11 மாதங்களுக்குப் பணிபுரிந்தார்.
குழந்தை உறங்கும் அதே அறையில் டால்போவும் தூங்கினார்.