ஆசியா கல்ஃப் ஹோல்டிங்ஸ் ஆலோசகர் குழுவில் மாலிகி ஒஸ்மான்

ஆசியா கல்ஃப் ஹோல்டிங்ஸ் ஆலோசகர் குழுவில் மாலிகி ஒஸ்மான்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Oct 2026 - 10:18 pm

1 mins read

பஹ்ரேன் உரிமம் பெற்ற சிங்கப்பூர் கல்ஃப் வங்கியை நடத்தும் ஆசியா கல்ஃப் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் உலகளாவிய ஆலோசகர்கள் குழுவில் சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் டாக்டர் மாலிகி ஒஸ்மான் மற்றும் ரெவோலுட் குழுமத்தின் தலைவர் மார்ட்டின் கில்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நியமனங்கள் திங்கட்கிழமை (அக்டோபர் 26) அறிவிக்கப்பட்டன.

ஆசியா கல்ஃப் ஹோல்டிங்ஸ் முதலீட்டுக் குழுமத்திற்கு புவிசார் அரசியல் விவகாரங்கள், அரசாங்க உறவுகள், வட்டார ஒத்துழைப்பு ஆகியன குறித்து திரு மாலிகி ஆலோசனை வழங்குவார்.

அதேவேளை, உலகளாவிய முதலீட்டு உத்தி, சொத்து நிர்வாகம், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவற்றில் திரு கில்பர்ட் கவனம் செலுத்துவார்.

திரு மாலிகி, 24 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார்.

அவர் வகித்த பொறுப்புகளில் பிரதமர் அலுவலக அமைச்சர், வெளியுறவு இரண்டாம் அமைச்சர், கல்வி இரண்டாம் அமைச்சர், தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஆகியவை அடங்கும்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தென்கிழக்கு மாவட்டத்தின் மேயராகவும் திரு மாலிகி பணியாற்றினார்.

குறிப்புச் சொற்கள்