தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலைப்பாளராக ஆள்மாறாட்டம் செய்து $2.5 மில்லியன் முறைகேடு

1 mins read
1787ba9f-0e7e-4cc8-86c8-9dc67ec5640f
திரு டீ மீது சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டிலும் சுமார் $128,000 முதல் $705,000 வரையிலான முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர் ஒருவர், மற்ற நிறுவனங்களின் நியமிக்கப்பட்ட கலைப்பாளராகச் செயல்பட்டு, கிட்டத்தட்ட $2.5 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அக்டோபர் 3ஆம் தேதி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

லேர்னிங் ஸ்பேஸ் மற்றும் ஏக்கர்ஸ் கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராக இருந்த 48 வயதான டீ வெய் லி, எட்டு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

அந்தச் சிங்கப்பூரர், 2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு குற்றச்சாட்டிலும் சுமார் $128,000 முதல் $705,000 வரையிலான முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

$705,000, ரைஃப் இன்ஜினியரிங் எனப்படும் நிறுவனத்துடன் தொடர்புடையது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

2022ஆம் ஆண்டு, ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 22 வரை, டீ அந்நிறுவனத்தின் நியமிக்கப்பட்ட கலைப்பாளராக இருந்தார். மேலும் அந்தத் தொகை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர் அந்தப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

யுனைடெட் லீகல் அலையன்ஸ், நியூஸ்டெட் டெக்னாலஜிஸ், பிளாண்டேஷன் மேனேஜ்மென்ட் பார்ட்னர்ஸ் மற்றும் பிரைட்டாயில் 639 ஆயில் டேங்கர் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட கலைப்பாளராகச் செயல்பட்டபோது அவர் இதே போன்ற குற்றங்களைச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

டீயின் வழக்கு நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்