ஈசூன் காப்பிக்கடையில் வாக்குவாதம்; ஆடவர் கைது

ஈசூன் காப்பிக்கடையில் வாக்குவாதம்; ஆடவர் கைது

1 mins read
f02a1fa6-8f8a-49dd-9222-05d9889250aa
இச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது. - படம்: சாவ்பாவ்

ஈசூன் காப்பிக்கடை ஒன்றில் வாக்குவாதத்தின்போது கையில் கத்தியை எடுத்துக்கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்த முயன்ற 57 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

புளோக் 807 ஈசூன் ரிங் ரோட்டில் திங்கட்கிழமை (ஜனவரி 8ஆம் தேதி) நடந்த இச்சம்பவம் குறித்துத் தங்களுக்கு அன்று இரவு 8 மணியளவில் தகவல் கிடைத்தது எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர், 61 வயதுடைய மற்றோர் ஆடவருடன் அந்தக் காப்பிக்கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் மேலும் கூறினர்.

ஆபத்து விளைவிக்கும் ஆயுதம் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்த முயன்றதன் தொடர்பில் அந்த 57 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்