தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் காரில் கூடாரமிட முயன்ற ஆடவர்

2 mins read
6f141e8f-cdf7-416d-93b2-04ab67477e87
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள ஓர் இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு திரு ஹெங் ஒரு கூடாரம் அமைத்தார். - படம்: மதர்ஷிப்

இளையர் தினத்தை சிறப்பாகக் கழிக்க விரும்பிய திரு ஹெங், தனது இரண்டு குழந்தைகளை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அழைத்துச் சென்று, பள்ளி விடுமுறையில் அவர்களுடன் மகிழ்வுடன் நேரத்தைச் செலவிடச் சென்றார்.

ஜப்பானில் காரில் முகாமிடும் மகிழ்ச்சியைக் கண்டறிந்த அவர், சிங்கப்பூரில் அவ்வாறு செய்ய முடிவு செய்தார்.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள ஓர் இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு ஒரு கூடாரம் அமைத்தார்.

இருப்பினும், இறுதியில் அவரது கார் முகாமை அகற்றுமாறு அங்கு வந்த தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதர்ஷிப் செய்தித் தளத்துடன் பேசிய திரு ஹெங், சிங்கப்பூரில் கார் முகாமில் ஈடுபடுவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றேன் என்றும் ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பகிர்ந்துகொண்டார். இதனால், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் தனது காரில் இருந்து முகாமிட முடிவு செய்தார்.

ஜூலை 7ஆம் தேதி, திரு ஹெங் காலை 7.30 மணியளவில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவை அடைந்தார். மேலும் ஷாப்பி பொருள் வாங்கும் தளத்திலிருந்து கிட்டத்தட்ட $160க்கு வாங்கிய கூடாரத்தை அமைப்பதில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவிட்டார். அது அவரது காரின் பின்பகுதியிலிருந்து நீண்டிருந்தது.

அவர் இளைப்பாறத் தொடங்கும் வேளையில் தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் வந்து முறையான அனுமதியின்றி, பொது இடங்களில் கூடாரம் அமைக்க முடியாது என்றனர்.

மேலும், அந்த இடம் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய பொதுவான இடமாக இருப்பதால், அவ்வாறு கூடாரம் போடுவது பாதுகாப்பாக இருக்காது என்று அறிவுறுத்தினர்.

அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட திரு ஹெங், கூடாரத்தை அகற்றி, அவ்விடத்தைவிட்டுச் சென்றார்.

குறிப்புச் சொற்கள்