கொவிட்-19 தாக்கத்தை சமாளிக்க உதவியவருக்கு பொதுச் சேவை நட்சத்திரப் பதக்கம்

கொவிட்-19 தாக்கத்தை சமாளிக்க உதவியவருக்கு பொதுச் சேவை நட்சத்திரப் பதக்கம்

1 mins read
fcf2d17e-12e7-4623-9e82-4e078efad372
சுகாதார அமைச்சின் நெருக்கடிகால உத்திபூர்வ, செயல்பாட்டுக் குழு இயக்குநர் தினேஷ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய அளவில் தடுப்பூசித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் முதன்மை பங்காற்றியவர் திரு தினேஷ் வாசு தேஷ்.

கொவிட்-19க்கு எதிராக சிங்கப்பூரின் மக்கள்தொகைக்குத் தடுப்பூசி போடும் முயற்சிகள் இதற்குமுன் கண்டிராத அளவுக்கு வேகமாகவும் விரிவாகவும் நடந்ததென நினைவுகூர்ந்தார் திரு தினேஷ்.

தடுப்பூசி நிலையங்களை விரைவாகத் தயார்படுத்துதல், தடுப்பூசிகளைச் சரியான தட்பவெப்ப நிலையில் வைத்திருத்தல், குறித்த நேரத்தில் தடுப்பூசியைப் போட்டு முடித்தல் போன்ற பல்வேறு கூறுகளில் கவனம் செலுத்த வேண்டி இருந்ததாக சுகாதார அமைச்சின் நெருக்கடிகால உத்திபூர்வ, செயல்பாட்டுக் குழு இயக்குநருமான அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்குத் தடுப்பூசியின் பாதுகாப்பையும் செயல்திறத்தையும் உணர்த்த விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர் ஆற்றிய பங்களிப்பால் இதுவரை 17 மில்லியனுக்கும் மேற்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கொள்ளைநோயின் மூன்றாண்டு காலத்தில் தாம் அதிகம் பெருமைப்படக்கூடிய ஒரு சாதனை இது என்றார் அவர்.

திரு தினேஷுடன் மேலும் 31 பேருக்கு பொதுச் சேவை நட்சத்திரப் பதக்கம் (கொவிட்-19) வழங்கப்படவுள்ளது.