பெட்ரோல் நிலையக் கடையில் 80 முறைக்குமேல் திருட்டு; ஆடவர்மீது வழக்கு

பெட்ரோல் நிலையக் கடையில் 80 முறைக்குமேல் திருட்டு; ஆடவர்மீது வழக்கு

1 mins read
3283f242-1a6d-4c1a-838b-e61f8bf36153
படம்: கூகள் வரைப்படம் -
Google News Preferred Icon

சிங்கப்பூரின் ‌ஷெல் பெட்ரோல் நிலையத்தில் உள்ள கடையில் 80க்கும் அதிகமான முறை திருடிய சந்தேகத்தின்பேரில் ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அல்பர்ட் பாங் என்னும் 51 வயது அந்த ஆடவர் ஹாவ்லாக் ரோட்டில் உள்ள பெட்ரோல் நிலைய கடையில் செய்தித்தாள்கள், மிட்டாய்கள், பத்திரிகைகள் போன்றவற்றைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆடவர்மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தியோங் பாரு பகுதியில் செய்தித்தாள்கள், பொட்டலங்கள் காணாமல் போனதாக காவல்துறை அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சந்தேக நபர் பாங் கைது செய்யப்பட்டார்.

ஆடவரிடம் மார்ச் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்திருட்டு