பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனத்தை ஓட்டியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனத்தை ஓட்டியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
b2f24e68-07f3-456b-b822-d17576953462
சிங்கப்பூர் நீதிமன்ற வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் சாலைகளில் ஓட்டமுடியாது என பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்களைப் பல்வேறு சமயங்களில் ஓட்டிய குற்றத்துக்கு ஆடவர் ஒருவர்மீது புதன்கிழமை (ஜூலை 29) போக்குவரத்து விதிமீறல்களுக்கென பற்பல குற்றங்கள் சாட்டப்பட்டன.

பென்ஜமின் டேனியல் லிம் செங் வெய் என்ற 22 வயது ஆடவர் எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது, பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டியது ஆகிய குற்றங்களும் அவற்றுள் அடங்கும்.

பிடோக் ரெசர்வாயர் ரோட்டில் ஜூன் 14ஆம் தேதி பின்னிரவு 12.50 மணிக்கு மாற்று வாகன எண்கள் பட்டையுடன் பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனத்தை அவர் ஓட்டியதாக நீதிமன்றக் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.

அதே ஆடவர், ஜூன் 18 அன்று இரவு 10.20 மணியளவில் பொங்கோலில் உள்ள எட்ஜ்டேல் பிளேனில் மற்றொரு பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனத்தை ஓட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அப்போதும் அவரிடம் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லை.

அவரது வழக்கு விசாரணை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய போக்குவரத்து தற்காலிக அமைச்சராக இருந்த ஜெஃப்ரி சியாவ், பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் ஓட்டப்பட்ட 245 வழக்குகள் விசாரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டைவிட 75 வழக்குகளும், 2023ஆம் ஆண்டைவிட 23 வழக்குகளும் அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.

பல குற்றச் செயல்களுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் பயன்பட்டன என்றும் அவர் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்
வாகனம்ஓட்டுநர் உரிமம்உரிமம்குற்றம்பதிவுநீதிமன்றம்விசாரணைபொதுப் போக்குவரத்துபோக்குவரத்து அமைச்சு