மேக்ஸ்வெல் உணவங்காடியில் செப்டம்பர் மாதம் ஆறாம் தேதியன்று மாது ஒருவர் கொல்லப்பட்டதன் தொடர்பில் ஓர் ஆடவர்மீது ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சீனாவைச் சேர்ந்த 41 வயது வூ தாவ் எனும் ஆடவர், திருவாட்டி டான் காமொன்வான் எனும் 48 வயது மாதைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.செப்டம்பர் ஆறாம் தேதி இரவு 10.25 மணிக்கும் 10.53 மணிக்கும் இடையே கடையநல்லூர் ஸ்திரீட்டில் உள்ள மேக்ஸ்வெல் உணவங்காடியில் இருக்கும் கடை ஒன்றில் மாது கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான வூ, செப்டம்பர் ஏழாம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குப் பிறகு புக்கிட் மேரா ஈஸ்ட் அக்கம்பக்க காவல்துறை நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. மாதைத் தான் கத்தியால் குத்தியதாக வூ அதிகாரிகளிடம் கூறியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.