அவசர சிகிச்சையளிக்க மறுத்த 10 மருத்துவமனைகள்; ஆடவர் மரணம்

அவசர சிகிச்சையளிக்க மறுத்த 10 மருத்துவமனைகள்; ஆடவர் மரணம்

1 mins read
824f70db-c015-4d90-a30e-3a7ce40922a9
சிகிச்சைக்காக 10 மருத்துவமனைகளுக்கு சென்றும் ஆடவரை எந்த மருத்துவமனையும் சேர்த்துக்கொள்ளவில்லை.  - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியாவில் 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடியுள்ளார்.

சிகிச்சைக்காக 10 மருத்துவமனைகளுக்கு சென்றும் அவரை எந்த மருத்துவமனையும் சேர்த்துக்கொள்ளவில்லை. தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் அந்த ஆடவர் மாண்டார்.

ஜியோஜோ நகரத்தை சேர்ந்த அந்த ஆடவர் செப்டம்பர் 6ஆம் தேதி அதிகாலை 3.30 மணிவாக்கில் வயிற்று வலியாலும் வாந்தியாலும் பாதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அந்த நபர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு சென்றார். ஆடவர் 10 மருத்துவனைகளுக்கு உதவி கேட்டு சென்றார். ஆனால் யாரும் அவரை அனுமதிக்கவில்லை.

இறுதியில் ஒரு மருத்துவமனையில் இடம் கிடைத்தது. ஆனாலும் அங்கு அவரை கவனிக்க மருத்துவ ஊழியர்கள் இல்லை. பின்னர் பூசான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் காலை 9 மணிவாக்கில் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

இருப்பினும் ஆடவர் இரண்டு நாள்களுக்குப் பின்னர் மாண்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தென்கொரிய அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தென்கொரியாவில் மருத்துவ ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் மருத்துவமனைகளில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவசர சிகிச்சை தேடி மருத்துவமனை வருபவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறுகின்றன.

குறிப்புச் சொற்கள்